Breaking News

சீனாவுக்கென தனியாக செயல்படும் வகையில் சிறப்பு புலானாய்வு குழுவை உருவாக்கியது அமெரிக்கா : ‘சீன மிஷன் மையம்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் சிஐஏ இயக்குநர்

US creates special investigative team to work exclusively for China CIA Director

அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பான சிஐஏ, சீனாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு சீனா மிஷன் மையம் (China Mission Center) CIC என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஐஏ இயக்குநர் William Burns வெளியிட்டார்.

சீனா தொடர்ந்து அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருவதாகவும், அது பெய்ஜிங்கை மையமாகக் கொண்டு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சிஐஏ தெரிவித்துள்ளது.

US creates special investigative team to work exclusively for Chinaஅதன் ஒரு பகுதியாக சீனாவை எதிர்கொள்வது தொடர்பான சிஐஏ இயக்குநர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் சீன மொழி பேசுபவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் சீன மிஷன் மையம் அதன் செயல்பாடுகளை வேகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மேற்கொண்டு வரும் முரட்டுத்தனமான தாக்குதல் மற்றும் பொருளாதார சீர்குலைவுகள் குறித்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை உலக அளவில் பொதுத் தளத்தில் விவாதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. பருவ நிலை மாற்றம், வட கொரியா அணு ஆயுத பரிசோதனை உள்ளிட்டவை குறித்தும் பேச வேண்டியது அவசியமாகிறது என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா புலனாய்வு குழுவுக்கு சீனா மிகப்பெரும் சவாலாக விளங்கி வருவதாகவும், ராணுவம் மற்றும் அதி நவீன தொழில்நுட்பத்திற்கு பதிலடி தரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிஐஏ இயக்குநர் William Burns தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3apoehE