Breaking News

டைனோசர்கள் ஆராய்ச்சியில் ஆஸ்திரேலியா உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

டைனோசர்கள் குறித்தான செய்திகள் எப்போதும் மனிதனுக்கு ஆச்சர்யத்தையும், அதன் மீதான ஆர்வத்தையும் தூண்டுபவை. டைனோசர்கள் முற்றிலும் அழிந்திருந்தாலும், அது குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தொடர்ந்து வருகின்றன.

தொல்லியல் எச்சங்களான எலும்புகள், பற்கள், அதன் டி.என்.ஏக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் குறித்த வாழ்கை முறையை அறிந்துக்கொள்ள முடியும்.

அந்த வகையில் டைனோசர்களின் ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார் ஸ்டூவர்ட் மெக்கென்ஸி.

Australia is gaining global prominence in dinosaur research,ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வசிக்கும் ஸ்டூவர்ட் மெக்கென்ஸியின் மகன் சாண்டி விளையாடச் சென்றபோது, தன் கண்ணில் வித்தியாசமாகத் தெரிந்த ஒரு கல்லைத் தூக்கிக்கொண்டு வருகிறார். அவர் எடுத்து வந்த பொருள் சற்றே வித்தியாசமாக இருந்ததை தொடர்ந்து, அது குறித்து சோதனையை தீவிரப்படுத்தும் போது அது ஒரு தொல்லியல் எச்சம் என்பது தெரியவருகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு அவர்களின் வாழ்வையே மாற்றுகிறது, அதுவரை எழுதப்பட்ட டைனோசர்களின் வரலாற்றையும், அதில் ஆஸ்திரேலியாவின் இடத்தையும் புரட்டிப் போடுகிறது.

தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இப்போது இது டைனோசர்களில் ஒரு புதிய இனம் என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். இந்த டைனோசர் ஓர் இரண்டு அடுக்கு கட்டடத்தின் அளவுக்கு உயரமானது. 100 அடி நீளம் கொண்டது. அதாவது ஒரு பேஸ்கெட் பால் மைதானத்தின்8 அளவு நீளம். 40-60 டன்கள்வரை இதன் எடை இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலேயே இதுதான் பெரியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதன்மூலம் முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட ஒரு டைனோசர் உலகின் மிகப்பெரிய டைனோசர்களின் பட்டியலில் ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது. இதுவரை தென் அமெரிக்காவின் டைனோசர்கள்தான் அந்தப் பட்டியலை ஆக்கிரமித்திருக்கின்றன.

புதிதாக கண்டறியப்பட்ட இந்த ராட்சத டைட்டனோசோரியன், சோராபாட் (Sauropod) எனும் வகையைச் சேர்ந்தவை. அதாவது தாவர வகைகளை உண்டு உயிர் வாழ்பவை. இது ஆஸ்திரலோடைட்டன் (Australotitan) என்ற பேரினத்தின் கீழ் வருகிறது. கூப்பர் என்ற சிற்றோடை அருகில் கண்டறியப்பட்டதனால், இந்தப் புதிய டைனோசர் வகைக்கு ‘கூப்பரென்சிஸ்’ (Cooperensis) என்று பெயரிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவிலேயே தற்போது நிறைய இடங்களில் டைனோசரின் எலும்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அவை ஆராய்ச்சியில் இருக்கின்றன. இது குயின்ஸ்லாந்தின் 10 கோடி வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை மாற்றி எழுதியிருப்பதாக தெரிவிக்கிறது குயின்ஸ்லாந்து அருங்காட்சியகம்.

இது குறித்து தொல்லியல் உயிரியலாளர், ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜி அமைப்பின் உறுப்பினர் நிர்மல் ராஜாவிடம் பேசியபோது

Australia is gaining global prominence in dinosaur research.,ஏற்கெனவே இந்தப் பகுதியில் நிறைய டைனோசர்கள், குறிப்பாக மூன்று தாவரம் உண்ணும் சோரபாட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கூப்பர் இதனுடன் தொடர்புடைய ஒன்றுதான். மெக்கின்ஸி குடும்பம் இந்தப் புதிய டைனோசரின் எச்சங்களைக் கண்டறிந்தவுடன், குயின்ஸ்லாந்து அருங்காட்சியகம், மெல்பேர்ன் பல்கலைக்கழகம், எராமோங்கா இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் எனப் பல அமைப்புகள் இணைந்து இந்த எலும்புகளை ஆராய்ந்துள்ளன. இது ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய டைனோசர்தான் என்றாலும் உலகளவில் இன்றுவரை அர்ஜென்டினாவின் பெட்டகோடைட்டன் (Patagotitan) என்ற இனம்தான் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது

இதுவரை கூப்பரின் சிதிலமடைந்த தொடை எலும்பு, முதுகெலும்பு மற்றும் என்னவென்றே தெரியாத சில எலும்புகளும்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விலங்கு இறந்த பின்னர் அதன் எலும்புகள் முற்றிலும் ஒரே இடத்திலே இருக்காது. காற்று, நீர், பிற விலங்கினங்கள் போன்றவற்றின் மூலம் அவை பல இடங்களைச் சென்றடையும். கூப்பருக்கும் இதுதான் நடந்திருக்கிறது. கண்டறியப்பட்ட எலும்புகளின் எடை 10 கிலோவிலிருந்து 1 டன் வரை இருக்கிறது.

சிடி ஸ்கேன் மற்றும் 3டி ஸ்கேன் மூலமாக அந்த எலும்பின் தன்மைகளை ஆராய்ந்து டிஜிட்டலில் ரெட்ரோடிஃபார்மேஷன் (Retrodeformation) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அதை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இதை இதுவரை கண்டறியப்பட்டிருக்கும் டைனோசர்களின் தரவுகளுடன் ஒப்பிட்டு, இது புதிய வகை டைனோசர் என்பதையும் ஆஸ்திரேலியாவிலேயே பெரியது என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள்.

dinosaurஇந்த எரமோங்கா பேசின் அப்போது டெல்டா பகுதியாக இருந்திருக்கிறது. அதன் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள, அதற்கேற்றவாறு ஒரு பொதுவான இனத்திலிருந்து புதிய இனமாகப் பிரிந்து, அங்கே வாழ்ந்த உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்ற டைனோசர்களைக் காட்டிலும் இது அளவில் பெரியதாகவும், நீண்ட கழுத்துள்ளதாகவும் இருந்திருக்கிறது” என்கிறார்.

இதன் மூலம், இதுவரை டைனோசர்கள் குறித்து எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்களில் இந்த கண்டுபிடிப்புகள் குறித்து சேர்க்கப்படவிருக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆர்வலர்களுக்குப் பிரமாண்டமானதொரு புதிய டைனோசர்களின் வாழ்கையை அவர்களுக்கு திரையிட காத்திருக்கிறது குயின்ஸ்லாந்து.

Link Source: https://bit.ly/3pYASex

leave a reply