இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள், போண்டி பகுதியை சேர்ந்த 60 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் விமான ஓட்டிகளுக்கு வாகன ஓட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
வாகன ஒட்டியுடன் தங்கியிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போண்டி சந்திப்பு பகுதிகளிலும், அப்பகுதியில் உள்ள பல்வேறு வணிக வளாகங்களில் சுற்றியதும் தெரியவந்துள்ளது. இதனால் போண்டி சந்திப்பு உட்பட, அவர்கள் சுற்றித்திருந்த பல பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அண்மையில் இப்பகுதிக்கு சென்றவர்கள் உடனடியாக 1800 943 553 என்ற உதவி என்னை அழைக்கும் படியும், உடனடியாக தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் முதலாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து அறிய மரபணு சோதனை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொற்று நோய் துறை பேராசிரியர் மைக் டூல், அடுத்த 24 மணி நேரம் மிகுந்த முக்கியமான தருணம் என்றும், தொற்று பாதித்தவர்கள் பல இடங்களில் சுற்றியிருப்பதால், உடனடியாக தொடர்பறிதலை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். விக்டோரியாவில் ஏற்பட்டதை போல வெவ்வேறு இடங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டால், ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை பரீசிலிக்கலாம் என்றும் டூல் தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்து மாகாணத்திலும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை முதன்மை அதிகாரி ஜென்னட் யங், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றவர்கள் உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கண்டறியும் விதமாக கூடுதல் பரிசோதனை மையங்களை திறக்கவும் குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை முடிவெடித்துள்ளது.
Link Source: https://ab.co/3wF0srO