Breaking News

தடையை மீறி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய வருபவர்களுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது

Australia has said those who violate the ban could face up to five years in prison

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அந்நாட்டில் இருந்து நேரடி விமானங்களுக்கு தடைவிதித்தது ஆஸ்திரேலிய அரசு.
‌அண்மையில் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இருவர் கத்தாரில் இருந்து இணைப்பு விமானம் மூலமாக ஆஸ்திரேலிய சென்றடைந்தனர். இது கடும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விவாதிக்க அமைச்சரவை கூடியது.

‌அதில் வரும் திங்கட்கிழமை முதல் விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய வருபவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை அல்லது 66,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரி பாதுகாப்பு சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Australia has said those who violate the ban could face up to five years in prison.சுமார் 9000 ஆஸ்திரேலியர்கள் தற்போது இந்தியாவில் இருபதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் மே 15 ஆம் தேதி வரை அந்நாட்டில் இருந்து நேரடி விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்ட், மக்களின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இம்முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலிய திரும்புபவர்களில் பெரும்பாலானவர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கும் சுமை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்திருபதாக சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் தெரிவித்துள்ளார்.


Human rights activist Elaine Pearson australiaஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலர் Elaine Pearson அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சிதுள்ளார். ஆபத்து காலங்களில் குடிமக்கள் தாய்நாடு திரும்பாமல் எங்கு செல்வார்கள் என்றும், அதற்கு சிறை தண்டனை என்பது வரம்பு மீறியது என்றும் விமர்சித்துள்ளார். நோய் தடுப்பு என்பது விடுதியில் மேற்கொள்வது மட்டுமல்ல என்று கூறும் அவர், போதிய கட்டமைபுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு போதிய உதவிகளை செய்து வருவதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/2QGyBrv