Breaking News

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடால் 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பல மாநிலங்கள் ஒத்திவைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய,  மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டது மத்திய அரசு.

ஏற்கனவே முன்கள பணியாளர்களுக்கும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.
சுமார் 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மே 1 முதல் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் இத்திட்டம் இன்று தொடங்க வாய்ப்பில்லை என்று மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா, கர்நாடக போன்ற மாநிலங்கள் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

Arvind Kejriwalஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கோரப்பட்டுள்ள தடுப்பூசிகள் வந்து சேராததால் மத்திய அரசு அறிவித்தப்படி மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரம் அனைத்து டெல்லி வாசிகளுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்

தமிழகத்தில் மூன்றாம் கட்ட தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட 1.5 கோடி தடுப்பூசி வந்து சேராததால் இத்திட்டம் தற்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் தயாரிப்பாளர்களிடம் கோரிய 1 கோடி தடுப்பூசிகள் வந்து சேராததால் இத்திட்டம் தற்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்

Many of the vaccination program for 18-44 years old due to corona vaccine shortage ‌ States deferred. 1இதே போன்று குஜராத், அருணாச்சலபிரதேசம், தெலுங்கானா, பஞ்சாம் போன்ற மாநிலங்களும் இத்திட்டத்தை இன்று தொடங்க சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளன. 18-44 வயதுக்குட்பட்டோருக்கு மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து சுமார் 2.5 கோடி பேர் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.

Link Source: https://bit.ly/2QGwJyZ