Breaking News

கோவிட் 19 : ஆக்சிஜன், மருந்து தேவை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

covid 19 Supreme Court warns state governments not to take action against those who post on social networking sites about the need for oxygen and medicine

உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த உத்தரவை மாநில அரசுகளுக்கும், காவல்துறை தலைவர்களுக்கும் பிறப்பித்துள்ளது. கொரொனா தொற்றின் இரண்டாம் அலையில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் படுக்கை, ஆக்சிஜன், தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகள், அவசர உதவி கோரி ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வதந்தி பரப்புவோர், உதவி கோருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேசம் சில மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இதனைத் தொடர்ந்தே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

post on social networking sites about the need for oxygen and medicineமீறி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மாநில காவல்துறை தலைவர்களும், அரசும் இதனை கடுமையான உத்தரவாக மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவை எற்றுக் கொள்வதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

இதனிடையே 1918, 1970 ஆகிய காலங்களில் நிலவிய பெருந்தொற்று மற்றும் அப்போதைய நீதிமன்ற உத்தரவுகளை நீதிபதிகள் நினைவு கூர்ந்தனர். மேலும், கல்வியறிவு இல்லாதவர்கள் எப்படி தடுப்பூசி போடுவதற்காக கோவின் செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்வார்கள் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ccovid 19. Supreme Court warns state governments not to take action against those who post on social networking sites about the need for oxygen and medicineதடுப்பூசி விலை நிர்ணயம் தொடர்பான விசாரணையின் போது ஒரே மருந்து எப்படி 3 விலையில் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும், தயாரிப்பாளர்களிடம் இருந்து ஏன் ஒரே விலைக்கு மத்திய அரசு கொள்முதல் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 300 ரூபாய்க்கும் விற்பனை செய்வது ஏன் என்றும், 30 முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் வித்தியாசத்தில் வரும் விலையை ஏன் நாட்டு மக்கள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் வினவினர். மேலும், அமெரிக்காவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை குறைவான மற்றும் ஒரே விலையில் அனைத்து மக்களுக்கும் வழங்கும் போது இங்கு மட்டும் ஏன் தடுப்பூசிக்கு கூடுதலாக விலை கொடுக்க வேண்டும் என்றும் சரமாரியாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் வினா தொடுத்தனர்.

அதேநேரம், மத்திய அரசு காப்புரிமை சட்டம் 92 வது பிரிவை பயன்படுத்தி அனைத்து தடுப்பூசி மருந்துகளுக்கும் ஒரே மாதிரியான லைசன்ஸ் வழங்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு 100 சதவீத மருந்துகளையும் கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு விநியோகித்திருக்க வேண்டும் என்றும் ஆனால், அந்த முடிவை மருந்து நிறுவனங்களிடமே அரசு விட்டுவிட்டது தவறானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தடுப்பூசி விவகாரத்தில் ஒரு சமநிலையை மத்திய அரசு பின்பற்ற தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற பெருந்தொற்று காலத்தில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்ட கொள்கையை மத்திய அரசு வகுத்திருக்க வேண்டும் என்றும், மருத்துவ பணியாளர்களுக்கு நிலவும் அவலநிலையையும் நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை வெறும் கொரொனா முன்கள பணியாளர்கள் என சுருக்கிவிட கூடாது என்றும், களத்தில் இருக்கும் அவர்களுக்காக செய்யப்பட்டது என்ன என்றும் நீதிபதிகள் வினவினர். மருத்துவ பணியாளர் பற்றாக்குறையை சரி செய்ய அரசு எடுத்த நடவடிக்கை என்ன எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

Link Source: https://bit.ly/3tbpADN