Breaking News

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறும் சீன நிறுவனங்கள்- காரணம் இதுதான்..!!

ஆஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பா, தென் அமெரிக்காவுக்கு படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.

Chinese companies leaving Australia - this is the reason

இரண்டு நாடுகளுக்குமான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து சீனா முடிவு.

அரசியல் ரீதியான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து தனது முதலீடுகளை திரும்பப் பெறும் முயற்சியில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

Chinese companies leaving Australia - this is the reason.கே.பி.எம்.ஜி என்கிற நிறுவனம், சிட்னி பல்க்லைக்கழகமும் இணைந்து ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அதனுடைய முடிவுகளின் படி, கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்து வரும் சீன நிறுவனங்கள், தற்போது வெளியேறி வருவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 70 விழுக்காடு வரை பொருளாதர சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

கடந்த 2008-ம் ஆண்டு இயற்கை வளங்களை எடுப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்குள் பெருமளவில் முதலீடு செய்தது சீன நிறுவனங்கள். அன்றைய ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு 16.2 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி கிடைத்தது. தற்போதுள்ள நிலைமையுடன் ஒப்பிடும் போது, இது 24 மடங்கு இழப்பு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் சீனாவின் இருதரப்பு உறவுகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன்காரணமாகவே பல்வேறு சீன நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களுடைய முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றன.

எனினும் நில அக்கிரமிப்பு, நீர் மேலாண்மை மற்றும் சுரங்கங்கள் போன்ற துறைகளில் சீனாவில் முதலீடுகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கிடையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வல்லுநர்கள் பல, ஆஸ்திரேலியா மற்றும் சீன அரசியலில் சுமூக முடிவுகள் எட்டப்படவுள்ளன. அதனால் இந்தாண்டு இறுதிக்குள் மீண்டும் சீன நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பலாம் என்று கூறியுள்ளனர்.