Breaking News

சிட்னியின் வில்லாவுட் தடுப்பு மையத்தில் 33 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

At the Villawood Prevention Center in Sydney, 33 people have been confirmed to have the corona virus, while 12 continue to be isolated.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சிட்னி நகரில் வில்லவுட் குடிவரவு தடுப்பு மையம் அமைந்துள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேர் முழுமையாக குணமடைந்து, தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்கிற வழிமுறையோடு காப்பாற்றப்பட்டனர்.

At the Villawood Prevention Center in Sydney, 33 people have been confirmed to have the corona virus, while 12 continue to be isolated..ஆனால் சமீப காலங்களில் இங்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே சமயத்தில் குடிவரவு தடுப்பு மையத்தில் தங்கவைப்பட்டுள்ளவர்களில் 50 சதவீதத்தினர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களாகவே உள்ளனர். எனினும் தடுப்பு மையத்தில் உட்புறப் பகுதிகளில் பாதுகாப்பு கட்டமைப்புகள் சரிவர இல்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், தனிமைப்படுத்தப்பட்டவர்களும் ஒன்றாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் டாமினிக் பெரோடெட் வெளியிட்டுள்ள தகவலில், தொடர்ந்து மேலும் ஒரு மாதத்துக்கு கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். சமூக இடைவெளி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, கியூ.ஆர் குறியீட்டை வைத்து நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்படுவது உள்ளிட்ட உத்தரவுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/35gLmzF