ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமையால் ஆளானபவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் கிரேஸ் தேம் (27). இதற்காக கடந்தாண்டு அவருக்கு சிறந்த ஆஸ்திரேலியருக்கான மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.
இதை முன்னிட்டு தன்னுடைய வீட்டில் வைத்து கிரேஸ் தேம்முக்கு பாராட்டு சந்திப்புக் கூட்டத்தை பிரதமர் ஸ்காட் மோரீசன் ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த கிரேஸ், பிரதமர் மோரீசனை ஓரக்கண்ணால் முறைத்துப் பார்த்தப்படியே இருந்தார்.
அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை பெற்று வருகின்றனர். சமூக செயற்பாட்டாளராக தன்னைக் காட்டிக் கொள்ளும் கிரேஸ், பிரதமர் மோரீசனை முறைத்துப் பார்ப்பது குழந்தைதனமானது என்று பலரும் கருத்து கூறியுள்ளனர். அதே சமயத்தில் லிப்ரல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜூலியா பாங்க்ஸ் கிரேஸ் தேம் செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் பங்கேற்றவர்களில் கிரேஸ் மட்டும் தான் தனது வாழ்க்கையை நேர்மையாகவும் ஒருமைப்பாட்டுடன் கொண்டும் வாழ்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் தேம், சமீபகாலமாக பிரதமர் ஸ்காட் மோரீசன் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக அவருடைய ஆட்சிக் காலத்தில் ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தது, ஆஸ்திரேலிய அரசியலில் புயலை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://ab.co/3g1uUFJ