அந்நாட்டிலுள்ள தெற்கு தீவுப் பகுதியான நெல்சன் என்கிற இடத்தில் 100 பேர் மட்டுமே பங்கெடுத்த திருமண நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கற்க ஆக்லாந்து நகரில் இருந்து ஒரு குடும்பத்தினர் விமானம் மூலம் சென்றுள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்த பணியாளருக்கும் தொற்று உறுதியானது.
இதையடுத்து நியூசிலாந்து நாட்டின் வடப் பகுதி முதல் தென் பகுதி வரை ஓமைக்ரான் வகை கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதேபோன்று 8 வயதுக்கு மேலுள்ள சிறார்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் நள்ளிரவு கூட்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் கடுமையான உத்தரவுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன், கொரோனா புதிய விதிகள் காரணமாக தன்னுடைய திருமணத்தையே தள்ளிப்போட்டுவிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://ab.co/358HnFi