Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாக்காளர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த ஆதரவு திரட்டும் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் அமைப்பு : பிப்ரவரி 21ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் 100 பேர் வரை பங்கேற்ற திட்டம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிக்கு எதிரானர்கள் இருந்துவரும் நிலையில், எதிர் வரும் தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்படும் சிறப்பு வாக்காளர்களுக்கான கூட்டத்திற்கு போதுமான ஆதரவை அவர்கள் திரட்டி உள்ளனர். மக்கள் தொகையில் 5 சதவீதம் அல்லது 100 வாக்களார்கள் பங்கேற்பதாக இருந்தால் சிறப்புக் கூட்டத்தை நடத்த கவுன்சில் அனுமதிக்கிறது.

Anti-vaccine organization mobilizes support to hold a special voter rally in Western Australia. up to 100 people plan to attend the February 21 meeting,.இந்நிலையில் Busselton பகுதியில் பிப்ரவரி 21ம் தேதி நடக்க உள்ள கூட்டத்திற்கு தடுப்பூசிக்கு எதிரானவர்கள் ஆதரவு தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்ற உள்ளதாகவும், ப்ரீமியர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை ப்ரீமியர் Mark McGowan நீக்க வேண்டும் என்றும், இதற்கு முந்தைய இது போன்ற கூட்டத்திற்கு கவுன்சில் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கூட்டத்தில் Pro Choice சமூகமாக தங்களை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் Busselton நகர மேயர் Grant Henley கூட்டம் குறித்த சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Anti-vaccine organization mobilizes support to hold a special voter rally in Western Australia. up to 100 people plan to attend the February 21 meeting.பெர்த் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் ஒரே இடத்தில் இத்தனை பேர் கூடுவதை அனுமதிப்பதில் சிக்கல் உள்ளதாக கூறியுள்ளார். தொற்று பரவல் மையமாக இந்த கூட்டம் மாறி சுகாதார அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும், இந்த விவகாரத்திற்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் மேயர் Grant Henley கூறியுள்ளார்.

கடந்த மாதம் Fremantle நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இது போன்று பல்வேறு சிக்கல்களை சுகாதார அமைப்பு சந்தித்துள்ளது என்றும், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் John Carey க்கு கடிதம் எழுதிஉள்ளதாகவும் மேயர் கூறியுள்ளார்.

தடுப்பூசிக்கு எதிரானவர்களின் கூட்டம் குறித்த விரிவான விளக்கத்தையும், வழிகாட்டுநெறிமுறைகளையும் வெளியிடுமாறு மேயர் Grant Henley கேட்டுக்கொண்டுள்ளார்.

சுயநல நோக்கோடு நடத்தப்படும் இது போன்ற கூட்டங்கள் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், மக்களின் குரலை பதிவு செய்ய குறிப்பிட்ட சமூகத்தை முன்னிறுத்த வேண்டியது அவசியமானது என்று பல்வேறு கருத்து மோதல்கள் சமூகவலை தளங்களில் நடந்து வருகிறது.

Link Source: https://ab.co/3gLu9Ri