Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் மாகாண தேர்தலுக்கு இன்னும் 5 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரம் : மோசமான விமர்சனங்களை பரஸ்பரம் கூறிக் கொள்ளும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள்

With just five weeks to go before the provincial elections in South Australia, political parties are intensifying. the ruling and opposition parties are voicing their grievances.

மாகாண தேர்தலுக்கு இன்னும் வாரங்களே உள்ள நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவின் மக்கள் அரசியல்வாதிகள் பெரும் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

With just five weeks to go before the provincial elections in South Australia, political parties are intensifying. the ruling and opposition parties are voicing their grievances...கடந்த இரண்டு ஆண்டுகளில் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை போன்ற நிலை இருந்ததாகவும், வணிகம் பெருமளவு சீரழிந்து பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து அரசியல் கட்சியினர் எந்த விவாதத்தையும் நடத்தவில்லை என்றும், மாறாக பரஸ்பரம் தங்களை குற்றம்சாட்டி அரசியல் செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்தது மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது குறித்தும், தொற்று நோய்க்கு பிறகும் தெற்கு ஆஸ்திரேலியா எதிர்கொள்ளம் சவால்கள் குறித்து எந்தவித விவாதமும் நடத்தாமல் கடந்த 24 மணி நேரத்தில் மிக கீழ்த்தரமான விமர்சனங்களை கட்சிகள் கூறி வருவதாக கூறப்படுகிறது.

With just five weeks to go before the provincial elections in South Australia, political parties are intensifying. the ruling and opposition parties are voicing their grievances..MLC Frank Pangallo மேல்சபையில் ஆற்றிய உரையில் எம்.பிக்கள் மற்றும் ஊழியர்கள் குறித்து பல்வேறு முறைகேடு புகார்கள் மற்றும் மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதே நேரத்தில் தற்போதைய பொருளாளர் Rob Lucas நெறிமுறைகளை தகர்த்து எறிந்து, முன்னாள் பொருளாளர் John Dawkins மனைவி Maggie Dawkins யின் மின்னஞ்சலை படிப்பதற்கான சிறப்பு அதிகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதில் பல்வேறு எம்.பிக்கள் கட்சிக்கு உண்மையாக இல்லாமல் இருந்தாக விமர்சித்து எழுதப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வரும் மாகாண தேர்தலில் வெற்றி தோல்வியை ஏற்படுத்தும் காரணிகள் குறித்தும் அந்த மின்னஞ்சல் பேசுவதாக பொருளாளர் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று எதிர்க்கட்சிகள் தற்போதைய எம்.பிக்கள் மீது பாலியல் புகார்கள் உள்ளதாகவும் அவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் பகிரங்மாக அறிவித்துள்ளது.

தேர்தலை எதிர்கொண்டுள்ள தெற்கு ஆஸ்திரேலியாவில் மேல்சபையில் நடைபெற்ற விவாதம் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், முறைகேடு புகார்கள், பாலியல் குற்றச்சாட்டுகள் அதற்கான ஆதாரங்கள் என கட்சிகளின் மோதல் போக்கை மக்கள் கவனித்து வருவதாகவும் இவை தேர்தலில் நிச்சம் எதிரொலிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3oJsEaJ