Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் 827 பேருக்கு வைரஸ் பாதிப்பு : சிகிச்சை பெற்று வந்த 19 பேர் உயிரிழப்பு

Another 827 people infected with the virus in the Australian state of Victoria. 19 died after receiving treatment

விக்டோரியா மாகாணத்தில் இன்னும் சில தினங்களில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி இலக்கு எட்டப்படும் என்ற நிலை உள்ளது. ஒரே நாளில் 857 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 19 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்று தெரியவந்துள்ளது. டெல்டா வகை வைரஸ் பாதிப்பால் இதுவரை 479 பேர் விக்டோரியா மாகாணத்தில் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை விக்டோரியா மாகாண பிரிமீயர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் ஐம்பத்தி இரண்டு வயது முதல் 105 வரை வயது உடையவர்கள் என்றும் ப்ரீமியர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் மக்களுக்கு தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அது வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை காக்கிறது என்பதற்கான இன்னும் போதுமான விளக்கங்கள் தேவைப்படுவதாக ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி தற்போது விக்டோரியா மாகாணத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் என்பது 89.3 சதவீதம் பேர் முழுமையாக 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களில் முடக்கநிலை அமல்படுத்தப்பட்டு இருந்தபோதே 90% தடுப்பூசி என்கிற இலக்கை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டதாகவும் அந்த நிலையை எட்டும்போது மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Another 827 people infected with the virus in the Australian state of Victoria. 19 died after receiving treatment.அதே நேரத்தில் மேற்கொள்ளப்படும் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து வருவதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பவர்களின் எண்ணிக்கை சராசரியாக குறைந்திருப்பதாகவும் பிரிமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனைகளில் வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 303 ஆக குறைந்துள்ளது. அவர்களில் 44 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் 23 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இரண்டு நூல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கான பெருந்தொற்று மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் பட்சத்தில் பூஸ்டர் தடுப்பு ஊசிக்கான நடவடிக்கைகளை மாகாண அரசு மேற்கொள்ளும் என்றும் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3xnBUV9