Breaking News

வறுமையில் வடுவோரின் பசியை போக்கும் அட்சய பாத்திரமாக திகழும் உணவு வங்கி அமைப்பு.

The Food Bank system, which plays a vital role in alleviating the hunger of those living in poverty.

உலகத்தை ஸ்தம்பிக்க வைத்த கொரோனா பரவலை ஓரளவுக்கு உலக நாடுகள் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் தள்ளியுள்ளது. இவர்கள் அன்றாட உணவிற்கே திண்டாடும் நிலையில் உள்ளனர். அது போல வறுமையின் பிடியில் சிக்கி, பசியால் வாடுபவர்களின் பசியை போக்கி வருகிறது உணவு வங்கி என்ற அமைப்பு.

The Food Bank system, which plays a vital role in alleviating the hunger of those living in povertyதன்னுடைய மோசமான கணவரிடம் இருந்து அண்மையில் விவகாரத்து பெற்ற அலெக்ஸ் என்ற பெண், தற்போது 4 குழந்தைகளுடன் தவித்து வருகிறார். போதிய பணமில்லாமலும், கொரோனாவினால் போதிய வேலை வாய்ப்பு கிடைக்காமலும் தவித்த அலெக்ஸும், அவரின் 4 குழந்தைகளும் பசியால் வாடத்தொடங்கினர். இதற்கு முன்பு இப்படி ஒரு நிலையை தான் எதிர்கொண்டதில்லை என்று தெரிவிக்கும் அலெக்ஸ், தங்களின் பசியை போக்கியது உணவு வங்கி தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

பசியால் தன்னுடைய குழந்தைகள் தவிக்கும் போது, உணவு வங்கியில் கிடைக்கும் உணவுடன் வீடு திரும்பும் போது தன்னுடைய குழந்தைகள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியை பார்க்க முடிவதாக அவர் தெரிவிக்கிறார். கொரோனா பாதிப்பில் இருந்து வர்த்தக நிறுவனங்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், போதிய வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் அலெக்ஸ் வரும் கோடை காலத்தை இந்த உணவு வங்கியை மட்டுமே நம்பி இருப்பதாக வேதனையுடன் கூறுகிறார்.

2021 ஹங்கர் ஆய்வு முடிவின் படி, கொரோனா ஊரடங்கால் ஆஸ்திரேலியர்கள் 38% பேர் உணவுக்காக திண்டாடியதாக தெரிவித்துள்ளது. இது முதல் முறை என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறுஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகம் தயாராகி வரும் நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒரு வேலை உணவுக்காக இந்த உணவு வங்கியை மட்டுமே எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

The Food Bank system, which plays a vital role in alleviating the hunger of those living in poverty.. 2020ஐ விட 2021 மிக மோசமான ஆண்டாக அமைந்ததாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உணவு வங்கியின் முதன்மை செயல் அதிகாரி Dave McNamara இன்னும் ஏராளமானோருக்கு உதவி தேவைப்படுவதாக தெரிவிக்கிறார். கணவனை இழந்து, கை குழந்தையுடன் தவிக்கும் தாயாரும், முன்னாள் ராணுவ வீரர்களும், ஊரடங்கால் வேலை இழந்த நபர்களும், உதவியை எதிர் நோக்கி காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். யாரும் பசியுடன் உறங்கக்கூடாது என்பது மட்டுமே தங்களின் லட்சியம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

Elessio Georgoulis உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பணியில் இருந்த இவர், கொரோனாவால் தன்னுடையை வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரின் வாழ்வாதாரத்திற்காக ஓட்டுநராக உணவு வங்கியில் பணிக்கு சேர்ந்த இவர், தற்போது கிடங்கின் முழு நேர மேலாளராக பணியாற்றுகிறார். இது குறித்து கருத்து தெரிவிக்கிம் எலிசோ, உணவு வங்கி போன்ற அமைப்புகள் இல்லாவிட்டால் தங்களை போன்றோரின் நிலை என்னவாகும் என்ற அச்சம் தனக்கு ஏற்படுவதாக கூறுகிறார். தற்போது இங்கு பணியாற்றுவது மன நிறைவை தருவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் உணவு வங்கி சுமார் 87 மில்லியன் உணவு பொருட்களை விநியோகித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

Link Source: https://ab.co/3r52JfK