Breaking News

மெல்போர்னில் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் பலி : விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து காவல்துறை விசாரணை

One killed in Melbourne road accident

மெல்போர்னில் வடகிழக்கு பகுதியில் உள்ள St Helena சாலையில் அதிகாலை நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வீடற்ற நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அதிகாலை 2. 51 மணிக்கு சாலையை கடக்க முயன்ற அந்த நபரை எஸ்யூவி வகை வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த நபர் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவர் வீடின்றி சாலையோரம் வசிக்கக்கூடிய நபராக உள்ளவர் என்றும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக புலனாய்வு காவல் ஆய்வாளர் Roger Schranz தெரிவித்துள்ளார்.

One killed in Melbourne road accident.St Halena சாலை – Wallowa சாலை சந்திப்பில் அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்து இருப்பதால் அந்த பகுதி மிகவும் இருளடைந்து இருந்ததாகவும் சாலையை கடக்க முயன்ற நபர் வாகனம் வருவதை அறியாமல் கடந்து இருக்கக்கூடும் என்றும் காவல் ஆய்வாளர் Roger Schranz தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் குறிப்பிட்ட வாகனத்தின் ஓட்டுநர் இடம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அவரிடம் பேசும்போது விபத்து தொடர்பான மேலும் பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வேறு ஏதேனும் தகவல் தெரிந்தால் அவர்கள் காவல் துறையினரிடம் தெரிவிக்கலாம் என்றும் அதற்கான கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணையும் 1800 333 000 காவல்துறை அறிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3DOI8Qd