Breaking News

கடந்த ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியன் Grace Tame–க்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்த விவகாரம் : அரசு தரப்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பெண்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் Anne Ruston தகவல்

2021 ம் ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியனாக தேர்வு செய்யப்பட்ட Grace Tame தேசிய பிரஸ் கிளப் மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் Brittany Higgins செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது, பிரதமர் ஸ்காட் மோரிசன் குறித்து எந்த விதமான எதிர்மறை கருத்துக்களையும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும், தாங்கள் பொதுமக்களிடம் செல்வாக்கு பெற்ற நபர் என்பதால் கூறும் கருத்துகள் அனைத்தும் விரைவில் சென்றடையும் என்று நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தன்னை மிரட்டியதாக Grace Tame கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசால் நிதியளிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரதமருக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் என்று தொலைபேசி நபர் கூறிய நிலையில், தான் அது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் எதிர் வரும் தேர்தலை மனதில் கொண்டு பிரதமர் குறித்த எதிர்மறை கருத்துகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த நபர் கூறியதாகவும் Grace Tame தெரிவித்துள்ளார்.

Anne Ruston, Minister of Defense for Women, says the government is conducting a proper investigation into the phone threat to last year's best Australian Grace Tame..அதே நேரத்தில் அந்த நபர் எந்த நிறுவனத்தை சேர்ந்தவர் என்ற விவரங்களை அவர் கூற மறுத்துவிட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் Anne Ruston இது குறித்து விரிவான விசாணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் வாயிலாகவே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தான் அறிந்து கொண்ட நிலையில், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து அரசுத் தரப்பில் யாரும் அறிந்திருக்கவில்லை என்றும் Anne Ruston கூறியுள்ளார்.

சிறந்த ஆஸ்திரேலியன் தேர்வு விவகாரத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக Grace Tame கருத்து தெரிவித்த நிலையில் இந்த மிரட்டல் அழைப்பு வந்துள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்த விசாரணையை அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற விவகாரங்களை பிரதமர் ஸ்காட் மோரிசன் அல்லது அவரது அலுவலகம் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை என்றும், சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் மன்னிப்பு கோரும் வகையில் விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3LojHNL