Breaking News

லாட்ரோப் பள்ளத்தாக்கிலுள்ள பெரிய பழைய சுரங்க தளம் சிட்னி துறைமுகத்தை விட பெரிய ஏரியாக மாற்றப்பட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறித்து விக்டோரியா அரசாங்கம் ஆய்வு செய்யவுள்ளது.

The Victorian government is set to study the environmental impact of converting a large old mining site in the Latrobe Valley into a lake bigger than Sydney Harbor.

விக்ட்ரியா மாகாணத்தில் இருக்கும் லாட்ரோப் பள்ளத்தாகு சிட்னி துறைமுகத்தைக் காட்டிலும் பெரியதாக உள்ளது. குறிப்பிட்ட இந்த இடத்தில் 637 ஜிகா லிட்டர் வரை நீரை சேமித்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே சிட்னி துறைமுகம் என்றால் வெறும் 500 ஜிகா லிட்டர் வரை மட்டுமே நீர் சேமிக்க முடியும்.

The Victorian government is set to study the environmental impact of converting a large old mining site in the Latrobe Valley into a lake bigger than Sydney Harbor..இதையடுத்து சுரங்கத்தை பராமரித்து வந்த சில உரிமையாளர்கள், உள்ளூர் பகுதியில் தண்ணீர் தேவையை போக்கும் விதத்தில் அந்த சுரங்கத்தில் நீரை தேக்கிவைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். விக்டோரியா மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. அதனால் சுரங்க உரிமையாளர்களின் கோரிக்கை அரசு ஏற்றுக்கொண்டு, லாட்ரோப் பள்ளத்தாக்கை ஏரியாக மாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Link Source: https://ab.co/3oFrPjr