Breaking News

அடிலெய்டு ஹில்ஸ் காட்டுத்தீயினால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் வீடுகளை இழக்க நேரிடும் என அஞ்சப்படுகின்றது!

Adelide hills

அடிலெய்டு ஹில்ஸில் ஒரு காட்டுத்தீயினால் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கட்டுப்பாடற்ற தீ ஆபத்தானது என அங்குள்ள குடியிருப்பு மக்களிடம் கூறப்பட்டு வருகிறது.

அடிலெயிடின் தென்கிழக்கில் உள்ள மலைப்பகுதிகளில் கட்டுப்பாடற்ற காட்டுத்தீ காரணமாக  வீடுகள் சேதமடையலாம் அல்லது அழிந்துவிடலாம் என அஞ்சப்படுகிறது.Cherry Garden-ஆல் திங்கள்கிழமை காலை ஒரு அவசர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.Mount lofty மலைத்தொடர்களில் உள்ள ஒன்பது இடங்களில் வசிக்கும் மக்களை ஆபத்தான தீ அச்சுறுத்தும் எனவும் அவர்கள் தயாராக இல்லாவிட்டால் அங்கு இருந்து வெளியேறலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. தீப்பிழம்பானது வடகிழக்குப் பகுதியில் எரிகிறது ஆனால் கடினமான காற்று நிலைமைகளை பார்த்தால் எதிர்பாராத விதமாக திசைகளை மாற்றக்கூடும் என்று தெற்கு ஆஸ்திரேலியா நாட்டின் தீயணைப்பு சேவை(CFS) கூறுகிறது.

Homes feared lost in Adelaide Hills2500 ஹெக்டர்க்கு  மேற்பட்ட நிலங்களை எரித்த தீயை கட்டுப்படுத்த 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு இரண்டு வீடுகள் இருப்பதாக கூறப்பட்டது ஆனால் அது அழிக்கப்பட்டதா இல்லை சேதமடைந்ததா என்பது எங்களுக்கு சரியாக தெரியவில்லை என Ywett Dowling கூறுகிறார். மேலும் “சேதமடைந்ததவிட நாங்கள் அதிகமாகவே புகார் அளிப்போம்” என எதிர்பார்க்கிறோம், ஆனால் பின்னர் வரை அது எங்களிடம் இருக்குமா இல்லை என்பது தெரியாது.

அடிலெய்டு ஹில்ஸில் வாழும் குடியிருப்பு மக்கள் சாலைகளில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்படுகிறது. மேலும் திங்கள் கிழமை மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அது தீபிழம்பை குறைக்க மற்றும் வெளியேற்ற வாய்ப்பில்லை.CFS கூறுகையில் மழை மற்றும் இடியுடன் கூடிய காற்று வீசுவதால் நெருப்பு பரவுவது அதிகரிக்கும் என கூறினார். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு மக்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புடன் இருக்க அந்நாட்டு சமூகங்கள் அறிவுறுத்துகிறது.

தீ இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடிலெய்டு ஹில்ஸில் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வரும் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை Clarendon-ல் உள்ள பிக்காட் ரேஞ்ச் சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு வாகனத்தை ரோந்தில் இருந்த வாகனம் கண்டது. மேலும் போலீசார் காரை நிறுத்தி சுமார் 60 வயதான ஒருவரை கைது செய்தனர், மேலும் அவர் மீது காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், உரிமம் பெறாத வாகனம் ஓட்டியதாகவும் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதாகவும் ஆகிய பிரிவுகளில் கைது செய்யப்பட்டார்.

Christies கடற்கரைப் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கப்பட்டது. மேலும் இந்த தீ பொதுமக்களை மட்டும் வெளியேற்றப்பட்டு குறைந்த சேதத்தை மட்டும் ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தீ அந்தப் பகுதியில் உள்ள மற்ற மக்கள் வாழும் பகுதியுடன் பரவி இருக்கிறதா என்பதைப் பற்றி துப்பறிவாளர்கள் விசாரித்து வருகின்றனர்.