Breaking News

மெல்போர்னில் எழுந்தருளி இருக்கக்கூடிய ஸ்ரீ வக்ரதுண்டா விநாயகர் ஆலயம் பற்றிய சிறப்பு பதிவு உங்களுக்காக !

Sri Vakrathunda Vinayagar Temple

ஸ்ரீ வக்ரதுண்டா விநாயகர் மெல்போர்னுக்கு வந்து அதை அவரது வீடாக மாற்றிய பயணம் மிகவும் சுவாரஸ்யமானது.ஆகஸ்ட் 1989 இல், விக்டோரியா இந்து சங்கத்தைச் சேர்ந்த குழுவினர், விநாயகர் கோவிலைக் கட்ட முடிவு செய்தனர் .இந்த குழுவில், ஒரு முக்கிய குழுவான  Pro Tem கமிட்டியை அமைத்தது .அதன் அடிப்படையில் விக்டோரியாவில் முதல் விநாயகர் கோயிலான – ஸ்ரீ வக்ரதுண்டா விநாயகர் கோயிலைக் கட்டும் பிரமாண்டமான பணியைத் தொடங்கியது.

விக்டோரியாவில் முதல் விநாயகர் கோயிலை அமைப்பதற்காக, ஒரு விநாயகர் விக்ரஹம் மற்றும் பூஜைகள் நடத்துவதற்கு தேவையான பொருட்களை  வாங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.அப்போது போருளாளராக இருந்த Shan Pillai மற்றும் அவரது குடும்பத்தினர் புனிதயாத்திரைக்காக இந்தியாவுக்கு சென்றனர் .அவர்கள் இந்தியாவில் இருந்தபோது கோவில் கட்ட தேவையான  பொருட்களைப் பெற முன்வந்தனர்.

Sri Vakrathunda Vinayagarஅவர்கள் சென்னைக்கு வந்ததும்,  1989 அக்டோபர் 25 அன்று . விக்ரஹம் செய்பவர் இருவர்களிடம் , அவர் இரண்டு பஞ்சலோகா விக்ரஹாம்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், இருவரும் காஞ்சி மடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், அதில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது . அப்படி தொடங்கப்பட்ட இந்த கோவிலின் பயணம் இன்று கும்பாபிஷேகத்திற்காக காத்துகொண்டு இருக்கின்றது .

மெல்பேர்ன் பேசின் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் பதினொரு சந்நிதிகளும் கருங்கல் சந்நிதிகளாக மாற்றப்பட்டு, பல  கலைநுணுக்கங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ள

இந்துக்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ள காரணத்தால் ஆலயத்தை மாற்றியமைக்கப்படவேண்டியது காலத்தின் தேவை எனகூறியுள்ளார் மெல்பேர்ன் விநாயகர் இந்து சங்க நிர்வாகக் குழுத்தலைவர் திரு. பாலா கந்தையா.

இக்கோயிலுக்கான முழுக்கருங்கல்லும் தமிழ் நாட்டின் ஒரே கல்-அகழ் இடத்திலிருந்து பெறப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.விநாயகரின் மூலஸ்தானம் கையால் செதுக்கப்பட்ட பதினேழு கருங்கல் அடுக்குகளால் ஆனது.தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ளது போல் இங்கும் மூலஸ்தானத்திற்கு மேற்பகுதி சிகரம் ஆறு tone எடையுள்ள ஒரே கல்லால் அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம் .நான்கு மில்லியன் டாலர் செலவில் கோவில் சீரமைக்கப்பட்டு தற்போது கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கிறது.

முதற்கடவுளான விநாயபெருமானின் ஆசிகள் அனைவர்க்கும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம் ! இது போல் பல நல்ல விஷயத்தோடு அடுத்த வீடியோல உங்கள சந்திக்கிறேன் ..

இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்னு நம்புறோம் ..இந்த அற்புத தகவல்களை உங்க நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லாருக்கும் ஷேர் செய்ங்க.. மறக்காம subscribe  பண்ணுங்க !