Breaking News

இந்தியாவில் இருந்து புறப்பட்ட இரண்டாவது மீட்பு விமானம் 165 ஆஸ்திரேலியர்களுடன் டார்வின் வந்தடைந்தது.

The second rescue plane from India arrived in Darwin with 165 Australians.

இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய குடிமக்கள் சுமார் 11,000 பேர் மீண்டும் நாடு திரும்ப வெளியுறவுத்துறையிடம் முறையிட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசு விதித்த பயணக்கட்டுப்பாடு காரணமாக இவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்ட து. இவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வர மீட்பு விமானங்கள் இயக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார்.

இதன்படி இயக்கப்பட்ட முதல் மீட்பு விமானத்தில் சுமார் 80 பேர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பினர்.

முதல் விமானத்தில் செல்ல முயன்ற பலருக்கு கொரோனா பரிசோதனையின் போது தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை இயக்கப்பட்ட இரண்டாவது மீட்பு விமானத்தில் சுமார் 160 பேர் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.

இவர்கள் டார்வினில் உள்ள தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவர்.

The second rescue plane from India arrived in Darwin with 165 Australiansசுமார் 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஆஸ்திரேலிய திரும்ப முன்பதிவு செய்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் சுமார் 1000 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதிக்குள் மேலும் 8 மீட்பு விமானங்கள் இயக்கப்படும் என்றும், அதில் வருபவர்களை தனிமைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா , விக்டோரியா போன்ற மாகாணங்கள் முன்வந்துள்ளன.

தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 100 பேர் தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Link Source: https://bit.ly/3fDz5qJ