Breaking News

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளதால் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

A night curfew has been imposed in Tamil Nadu as the second wave of the Corona intensifies.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்தும் அதனை தடுக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 65,635 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏபரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள்ளது.

இரவு 10 மணி முதல் 4 மணி வரை பொது மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வகுப்பு பொதுதேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

tamil nadu second wave corona lockdownஅன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ பணியாளர்கள், ஊடகத்துறையினர் காவல்துறையினர் போன்ற அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் விலக்களிப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம், தனி நபர் இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப துறையினர் 50% வீடுகளில் இருந்து பணிபுரிவதை அந்தந்த நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.