Breaking News

விக்டோரியாவில் தடுப்பூசி மையங்கள் திறப்பு : 50 வயதுக்கு உட்பட்டோருக்கும் அஸ்ட்ராசெனகா போட அனுமதி

Opening of Vaccine Centers in Victoria Permission to put AstraZeneca under 50 years of age

பல்வேறு இடங்களில் தற்காலிப மையங்களை திறந்து மக்களுக்கு கொரொனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி பணியை மீண்டும் தொடங்கி உள்ளதை உறுதிப்படுத்தி உள்ள விக்டோரியா அரசு, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாயமாகவும் 50 வதுக்கு உட்பட்டோரில் விருப்பப்படியும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

மெல்பர்ன் வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் 1A, 1B பிரிவை சேர்ந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

martin foley australiaமேலும், தடுப்பூசி தேவையை உணர்ந்து அந்தப் பணிகளை அரசு முழுவீச்சில் துரிதப்படுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், அச்சத்தைப் போக்கவும் தடுப்பூசி போடும் நிகழ்வு ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கான தொடக்கமாக இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் விக்டோரிய மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் தடுப்பூசி மூலம் உறுதி செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

விக்டோரியாவில் தற்போது அஸ்ட்ராசெனகா தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் மொத்தமாக வாங்குவதை அரசு உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Opening of Vaccine Centers in Victoria Permission to put AstraZeneca under 50 years of age 150 வயதுக்குட்பட்டோருக்கு போடும் பட்சத்தில் ரத்தம் உறைதல் புகார்கள் வருவதாக கூறப்பட்ட நிலையில், அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் அனைத்து வயது தரப்பும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை போட்டுக் கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முகாம்கள் மூலமாக 85 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்றும், 60 ஆயிரம் டோஸ் தற்போது கையிருப்பில் உள்ள நிலையில் அடுத்த ஐந்து வாரங்களுக்கு வாரத்திற்கு 50 முதல் 60 ஆயிரம் டோஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வாங்க விக்டோரியா அரசு திட்டமிட்டுள்ளது.