Breaking News

பேருந்தில் சிறுமியை தனியாக விட்டுச் சென்றவர்கள் இவர்களா..? நீதிமன்றத்தில் ஆஜரான 2 பெண்கள்..!!

பொதுப் பேருந்தில் 3 வயது சிறுமி தனியாக விட்டுச் செல்லப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை வரும் செப்டம்பர் 14-ம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Are they the ones who left the girl alone in the bus. 2 women appeared in court

கடந்த மே மாதம் 4-ம் தேதி கிரேஸ்மியர் பேருந்தில் மயங்கிய நிலையில் தனியாக இருந்த 3 வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி உடனடியாக குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.

Are they the ones who left the girl alone,அதே பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், சிறுமியை அடையாளம் காட்டினார். தான் பணியாற்றும் பராமரிப்பு மையத்தில் சிறுமியை பார்த்துள்ளதாக கூறினார். அவர் கொடுத்த தகவலின் படி கிரேஸ்மியர் பகுதியைச் சேர்ந்த பியாங்கா மேரி ரெனோல்ட்ஸ் (31) மற்றும் தாரா அலைஸ் ஸ்டீர்ஸ் (3) என்கிற இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்தபோது, பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட சிறுமியை கூட்டிச் சென்று, பெண்கள் இருவரும் பேருந்துக்குள் தனியாக விட்டுச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு ராக்ஹாம்ப்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது பிணையில் வெளியேவந்துள்ள குற்றஞ்சாட்டப்பட்ட 2 பெண்களும், நேற்று நீதிமன்றத்துக்கு வந்து கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கை வரும் செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் இவ்வழக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை குற்றம் உறுதிசெய்யப்பட்டால், குற்றஞ்சாட்டப்பட்ட பியாங்கா மேரி மற்றும் தாரா அலைஸுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.