Breaking News

ஆஸ்திரேலியாவின் நியூ கேஸ்டில் பகுதியில் பழைய கம்பளி கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து : புற நகர்ப்பகுதிகளில் புகை மூட்டம் அதிகமானதால் பொதுமக்கள் அவதி

A fire at an old woolen mill in Newcastle, Australia. The public suffers as smoke rises in the suburbs.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் நியூ கேஸ்டில் Wickham பகுதியில் உள்ள பழைய கம்பளி கூடம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பிற்பகல் நேரத்தில் வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் அங்கு விரைந்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.

A fire at an old woolen mill in Newcastle, Australia. The public suffers as smoke rises in the suburbsநூறு ஆண்டுகள் பழமையான மரப் பொருட்களைக் கொண்ட கட்டிடம் என்பதால் தீ மளமளவென பரவ தொடங்கியது. கட்டிடத்தில் இருந்து எழுந்த புகை பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவ தொடங்கியதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். குறிப்பிட்ட தீ விபத்துக்குள்ளான கட்டிடம் அலுவலகமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த காரணத்தால் அருகில் இருந்த வணிக பகுதிகளில் இருந்த மக்களுக்கு கடும் புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இரண்டு கட்டிடங்களுக்கு முழுமையாக தீ பரவி பாதிப்பு ஏற்பட்டதாகவும், மூன்றாவது கட்டிடத்திற்கு தீ பரவாமல் முழுமையாக தடுக்கப்பட்டு விட்டதாகவும் நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு துறையின் கண்காணிப்பாளர் Adam Dewbury கூறியுள்ளார்.

Annie Street, Milford Street, Robert Street உள்ளிட்ட பகுதிகளில் இருந்த மக்கள் கடுமையான புகை காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். New Castle பகுதி முழுவதுமாகவே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இருப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் Good Life தேவாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முழுமையாக அந்த பகுதி இயல்பு நிலைக்கு வந்த பின்னர் அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A fire at an old woolen mill in Newcastle, Australia. The public suffers as smoke rises in the suburbs..சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் தீ விபத்து ஏற்பட்ட Winchkam பகுதிக்கு வந்து அங்கிருந்த புகை மூட்டத்தின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர் இதன்காரணமாக பொதுமக்களுக்கு ஏதேனும் நோய் தாக்குதல் வர வாய்ப்பு உள்ளதா என்ற ரீதியில் அவர்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அலுவலக அமைப்புடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் என்பதால் அங்கு வசித்த பெரும்பாலானவர்கள் தற்போது தங்குவதற்கு இடம் இன்றி தவித்து வருவதாகவும் மேலும் தங்களது உடமைகள் ஏராளமானவை தீயில் சிக்கிக் கொண்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தற்போது மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தீயணைப்புத் துறை கண்காணிப்பாளர் Adam Dewbury தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3szDbaY