Breaking News

பிரிஸ்பேன், தென் கிழக்கு குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகணத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது : வெள்ள பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தும் பார்வையில் வெளியான காட்சிகள்

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை விட அதிக அளவிலான மழை பொழிவு இருந்தது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் மற்றும் தென் கிழக்கு குயின்ஸ்லாந்தின் Gold Coast மற்றும் Sunshine Coast ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக மக்களின் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Extreme levels of flood danger were announced in Brisbane, southeastern Queensland and New South Wales..Gympie பகுதியில் 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக 400 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சன்ஷைன் கோஸ்ட் பகுதியில் 140 மில்லி மீட்டர் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாகாணத்தின் பேரிடர் மீட்புக் குழு பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். Granite Belt, Darling Down போன்ற பகுதிகளில் மழைப் பொழிவு அதிக அளவில் இருக்கும் என்றும், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒரு மாதத்திற்கான மழைப்பொழிவை ஒரு சில நாட்களில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக ப்ரீமியர் Annastacia Palaszczuk எச்சரித்துள்ளார்.

இதே போன்று பிரிஸ்பேனின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக ஆறுகளின் கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Goodna, Ipswich உள்ளிட்ட இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் பாதிப்பின் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

Extreme levels of flood danger were announced in Brisbane, southeastern Queensland and New South Walesபிரிஸ்பேனில் உச்சபட்டமாக 3.58 மி.மி மழை பதிவாகி உள்ளதாகவும், 2011 வெள்ள பாதிப்பை ஒப்பிடுகையில் தற்போது கடுமையான பாதிப்பை சந்திதுள்ளதாகவும் கூறப்படுகிறது. தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் 18 ஆயிரம் மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 60 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3C8oyyH