Breaking News

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

A corona test for US President Joe Biden has confirmed he has no infection.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடன் பயணம் செய்யும் அதிகாரிகளுக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

A corona test for US President Joe Biden has confirmed he has no infection..அப்போது கிளாஸ்கோ குழுவில் இடம்பெற்றிருந்த வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் Jen Psakiக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் Jen Psaki, அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்ததால், அவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் பைடனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Jen Psakiக்கு தொற்று உறுதி செய்யப்படும் ஒரு நாளுக்கு முன்பாக அவர் அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். இருவருக்குமிடையே 1.5 மீட்டர் இடைவெளி இருந்ததாகவும், இருவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால் தொற்றுபரவம் வாய்ப்பு தவிர்க்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டி. பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பைசர் நிறுவனத்தின் 3வது பூஸ்டர் டோஸை பைடன் செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3pZn71u