Breaking News

நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதில் : இம்மானுவேல் மேக்ரன் ஆஸ்திரேலியாவின் இறையாண்மையை கேள்வி எழுப்புவதாக விளக்கம்

Australian PM responds to French President's harsh criticism of submarine deal. Emmanuel Macron interprets Australian sovereignty

பிரான்ஸ் ஆஸ்திரேலியா இடையிலான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து இருநாடுகளிடையே நிலவி வரும் பிரச்சனை கருத்து மோதலாக உருவெடுத்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பொய் சொல்லிவிட்டதாக கடுமையான விமர்சனங்களை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அதிபரின் புகார்களுக்கு தாங்கள் பதில் கூற விரும்பவில்லை என்றும், தங்கள் நாட்டு நலனை முக்கியமாகக் கொண்டே பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆக்கஸ் திட்டம் உருவாக்கப்பட்டது என்றும் பதிலளித்துள்ளார்.

Australian PM responds to French President's harsh criticism of submarine deal,. Emmanuel Macron interprets Australian sovereigntyஆஸ்திரேலியா 37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு 12 அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க பிரான்சிடம் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அதனை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா பிரிட்டன் உடன் இணைந்து ஆக்கஸ் திட்டத்தை உருவாக்கியது. இது தொடர்பாக பிரான்ஸ் தனது கடுமையான அதிருப்தியை பதிவு செய்திருந்தது. பிரான்ஸ் நாட்டுக்கான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு இடையில் ஒரு கசப்பான மோதலை உருவாக்கியது.

இந்த ஒப்பந்த ரத்து, “எங்கள் முதுகில் குத்தும் செயல்” என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர்களும் தற்காலிகமாக திரும்ப அழைக்கப்பட்டார்கள்.

Australian PM responds to French President's harsh criticism of submarine deal, Emmanuel Macron interprets Australian sovereigntyஇந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் பொய்யுரைத்துவிட்டதாக தாங்கள் நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, எனக்கு தெரிவதாக, நான் கருதவில்லை என்று கூறியுள்ளார். ஆக்கஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட தலைவர்கள் முதன்முறையாக கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அப்போது இரவு விருந்தின்போது ஆக்கஸ் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் கலந்துரையாடினர்.

தங்கள் நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் தாங்கள் தான் முடிவெடுக்க முடியும் என்றும் இது தொடர்பாக விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வரும் பிரான்ஸ், அவர்களின் ஒப்பந்தத்தில் இருந்த பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் அதனை சரி செய்து கொள்ளவில்லை என்றும் ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியுள்ளது. அனைத்து விமர்சனங்களையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உறுதியான முறையில் எடுத்து வருவதாகவும் அந்த வகையிலேயே ஆகஸ்ட் 13 மாக அமெரிக்காவிடமிருந்து அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3byor2O