Breaking News

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தமிழர்களின் ஒரே பாலின திருமணம் : கீர்த்தி மற்றும் அனிதா இந்து முறைப்படி மணந்து கொண்டனர்.

Same-sex marriage of Tamils ​​in Australia Keerthi and Anita were married according to Hindu rites.

தமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட சிவகாமி சேகர் தனது மகன் மற்றும் மகளுடன் 1983ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் குடியேறினார். இந்நிலையில் அவர் அங்கேயே வேறொரு இந்தியரான ரங்கநாதன் சர்மா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சிவகாமியின் மகள் கீர்த்தி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில் மகன் மருத்துவம் படித்து முடித்த பின்னர் அவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்க்கும் வேலையை தொடங்கினார் சிவகாமி. ஆனால் பல்வேறு வரங்களை பார்த்தும் எதுவும் சரிவர அமையாத நிலையில், கீர்த்தி தான் ஒருவரை பார்த்து உள்ளதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தாய் சிவகாமியிடம் கூறியுள்ளார். ஆனால் அது ஒரு பெண் என்றும் கீர்த்தி தெரிவித்துள்ளார் தன்னுடைய முப்பதாவது வயதில் தனக்கு பெண்கள் மீது ஈர்ப்பு இருப்பதாகவும் திருமண பந்தத்தில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழத்தான் விரும்புவதாகவும் கீர்த்தி முடிவெடுத்துள்ளார். ஆனால் இதனை பெற்றோரிடம் தெரிவிக்க அச்சமடைந்த கீர்த்தி இதன் மூலமாக அவர்களது உறவை இழந்து விடுவோமோ என்றும் கவலை அடைந்துள்ளார்.

சக பாலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மகள் கூறும்போது முதலில் அதிர்ச்சி அடைந்த சிவகாமி மற்றும் அவரது கணவர் ரங்கநாதன் ஆகியோர் இது தொடர்பாக கீர்த்தி இடம் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். தீவிரமாக வரன் தேடியும் கிடைக்காத ஒரு விரக்தி நிலையில் இதுபோன்ற முடிவை எடுத்தாரா, அல்லது உலகில் பல்வேறு நபர்கள் செய்துவரும் நடவடிக்கையை போல தாமும் செய்து பார்க்கலாம் என்கிற நிலையில் கீர்த்தி இந்த முடிவை எடுத்தாரா என தான் அவரிடம் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் நேர்மையாகவும் தெளிவாகவும் கீர்த்தி இந்த முடிவை எடுத்திருப்பது தான் உணர்ந்ததாக சிவகாமி கூறியுள்ளார். இதனை அடுத்து ஒரு பெற்றோராக தன் மகளை தான் ஆதரிக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் சிவகாமி சேகர் தெரிவித்துள்ளார்.

ஒரு மருத்துவராக இருந்ததால் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களை கையாளும் நுட்பம் தனக்கு இருந்த்தாகவும், ஆனால் உறவினர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறுகிறார் கீர்த்தி. இதனையடுத்து தனது திருமணம் இந்து முறைப்படி நடைபெறவேண்டும் என்கிற விருப்பத்தை தனது தாயிடம் தெரிவிக்க அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் இந்நிலையில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த நபர்கள் திருமண விருப்பத்தை பதிவு செய்யும் ஒரு செல்போன் App மூலமாக குயின்ஸ்லாந்தில் வசிக்கும் அனிதாவை கண்டடைந்து இருக்கிறார் கீர்த்தி.

இதனையடுத்து கீர்த்தி – அனிதா திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. ஒருவருக்கு ஒருவர் தாலி கட்டிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் விந்தணு தானம் பெற்று இருவரும் குழந்தையை பெற்றுக் கொள்வது என்றும், அல்லது குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது என்றும் முடிவு செய்துள்ளனர்.

திருமண வாழ்வை குயின்ஸ்லாந்தில் தொடர்ந்து வரும் இருவருக்கும் பல்வேறு சவால்கள் இருப்பதாகவும் அதனை அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கீர்த்தியின் தாயார் சிவகாமி தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3i7jrqp