Breaking News

அடுத்த நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியருக்கான போட்டியில் கருவூலக் காப்பாளர் Dominic Perrottet : மாகாணத்தில் ஒற்றுமையும், உறுதித்தன்மையும் குலையாமல் காப்பேன் என சபதம்

Treasurer Dominic Perrottet vows to preserve unity and stability in the province in the next New South Wales Premier League

நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியராக இருந்த Gladys Berejiklian மீது பல்வேறு நிதி கையாடல் முறைகேடு தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் அவர் பதவி விலகினார். லிபரல் கட்சிக்கான புதிய மாகாண தலைவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தன்னுடைய பிரிமியர் பொறுப்பில் இருந்து Gladys Berejiklian விலகுவதாக அறிவித்தார்.

Treasurer Dominic Perrottet vows to preserve unity and stability in the province in the next New South Wales Premier League..இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் புதிய பிரீமியர் காண போட்டியில் பல்வேறு நபர்கள் தற்போது களத்தில் இறங்கி வருகின்றனர் அந்த வகையில் நியூ சவுத் வேல்ஸில் கருவூல காப்பாளராக இருக்கும் Dominic Perrottet பிரிமியருக்கான போட்டியில் இறங்கியுள்ளார். மேலும் மாகாணத்தின் ஒற்றுமைக்கும் உறுதித்தன்மைக்கும் தான் உத்தரவாதம் அளிப்பேன் என்றும் அவர் சபதம் மேற்கொண்டுள்ளார்.

அதேநேரத்தில் லிபரல் கட்சியின் துணைத் தலைவரும் Western சிட்னியின் வேலைவாய்ப்பு, சுற்றுலாத் துறை அமைச்சருமான Stuart Ayres பிரீமியருக்கான போட்டியில்
டிக்கெட் பெற்றுள்ளார்.

இந்நிலையில் போட்டியில் உள்ள இருவரும் முந்தைய நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian பணிகளை தாங்கள் தொடர்ந்து செய்வோம் என்றும் தங்களுக்கான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிரிமியருக்கான டிக்கெட் பெற்றுள்ள Matt Kean தன்னுடைய ஆதரவை, Dominic, Ayres ஆகிய இருவருக்கும் வழங்குவதாக தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் நியூ சவுத் வேல்ஸ் கருவூலக் காப்பாளராக தொடருவதற்கான திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

Treasurer Dominic Perrottet vows to preserve unity and stability in the province in the next New South Wales Premier League.இதனிடையே, நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் போட்டியில் இருந்த Andrew Constance தான் போட்டியில் இருந்து விலகுவதாகவும், கூட்டாட்சி அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறியுள்ளார். முந்தைய பிரிமியர் Gladys Berejiklian மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆஸ்திரேலியாவின் ஊழல் கண்காணிப்பு அமைப்பான ICAC விசாரணை நடத்தி வருகிறது. மேலும் முன்னாள் எம்.பி Daryl Maguire உடனான ஐந்து ஆண்டுகால ரகசிய உறவு இருந்தாகவும், அந்த காலகட்டத்தில் அவரே தவறான நிதி கையாடல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

Link Source: https://bit.ly/3AdZ3cI