Breaking News

விக்டோரியா மாகாணம் பல்லார்ட் பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர், கடந்த மார்ச் 30-ம் தேதி பல்லார்ட் பேஸ் மருத்துவமனைக்கு நெஞ்சு சலி காரணமாக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த போது, அந்த நபருக்கு கிரோனிக் ஆர்கனிசிங் நிமோனியா (COP) என்கிற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பு, அந்த நபருக்கு 4 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்திலும் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்துள்ளது. இருப்பினும் அவரை மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை எடுத்து வரும் பகுதியில் இடம் ஒதுக்கியுள்ளது.

இதை எதிர்த்து போராடியும் அவர் அந்த பகுதியில் ஒரு வார காலம் தங்கவைக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு வார காலத்துக்கு பிறகு வீட்டுகு வந்த அவர், பல்லார்ட் பேஸ் மருத்துவமனை மீது பரபரப்பு புகார் கூறினார்.

மனிதாபிமானமற்ற முறையில் தான் அடைக்கவைக்கப்பட்டதாகவும், குடும்பம் மற்றும் நண்பர்களைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். அங்குள்ள பணியாளர்களை குறை சொல்லி எதுவும் பயனில்லை. உயர்மட்டத்தில் இருப்பவர்கள் தான் மருத்துவமனைகு வரக்கூடிய நோயாளிகளை அடிமைகளை போல நடத்துகின்றனர் என்றார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நுரையீறல் பாதிப்பு காரணமாக யார் வந்தாலும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதை தொடர்ந்து அவர் மருத்துவமனையிலும் தங்கவைக்கப்படுவார். நாங்கள் புகார் கூறிய நபர் மீது எந்த வன்முறையையும் பய்ன்படுத்தவில்லை என்று கூறியுள்ளது.