விடுமுறை நாட்கள் என்பதால் குழந்தைகளுடன் வீரர் ரயான் கேம்பெல் (50) விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து தூக்கி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது ரயான் கேம்பெல்லுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீகாணிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு இரண்டு முறை நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் கேம்பெல் விளையாடியுள்ளார்.ஆடம் கில்கிரிஸ்ட் கேப்டனாக இருந்த போது, இவர் பலமுறை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஹாங்காங்கில் டி20 போட்டியின் போது விளையாடியுள்ளார். அதேபோன்று நெதர்லாந்து ஆண் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக அவர் இருந்துள்ளார். வீரர் ரயான் கேம்பெல் விரைவில் நலம்பெற்று வரவேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.