Breaking News

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் இரத்த உறைதலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

A 34-year-old woman from the state of New South Wales who was vaccinated with astrazeneca has died of a blood clot.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவல் பல்வேறு மாகாணங்களில் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 34 வயது பெண் ஒருவர் அஸ்ட்ராஜெனிகா முதல் தவணை தடுப்பூசி செலுத்திகொண்ட நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த புதன்கிழமை அப்பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவ பொருள் கட்டுப்பாட்டுத்துறை, அப்பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

டி டி எஸ் என்று அழைக்கப்படும் திரோம்போசிஸ் பாதிபால் இந்த பெண் உயிரிழந்திருப்பதாக அறிவித்துள்ளது.

இது வரை 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் , இந்த இரத்த உறைதலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக பிளேட்லெட்களை தாக்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A 34-year-old woman from the state of New South Wales who was vaccinated with astrazeneca has died of a blood clotஇந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு அச்சப்படாமல், மக்கள் தடுப்பூசியால் பெருமளவில் கிடைக்கும் நன்மையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மருத்துவப் பொருள் கட்டுப்பாட்டுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்றும், ஒருவர் 1 டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த உறைதல் பாதிப்பால் உயிரிழந்த 6 பேரில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3CiKOFA