Breaking News

பாராசூட் வேலை செய்யாததால் ஸ்கை டைவிங் செய்தவர் உயிர் இழப்பு !

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங் செய்யும் போது தன்னுடைய பாராசூட் சரியாக வேலை செய்யாத காரணத்தினால், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் கூறுகையில், Jurien Bay ஒரு பிரபல சுற்றுலா தலமாகும். இந்த இடம் ஆண்டு முழுவதும் ஸ்கை டைவிங்ற்கு பிரபலமானது. தற்போது ஆஸ்திரேலியா முழுவதிலும் பல இடங்களில் Virtual Nationals Skydiving போட்டி ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. அதில் அந்த நபர் தன்னுடைய போட்டியிடும் நண்பர்களுடன் இருந்தார் என்றும், அவருக்கும் வயது 30 வயது என்று தெரிவித்தனர்.

skydiver dieஅங்கிருந்த உள்ளூர் local skydiving Company, அந்த மனிதர் வெளிநாட்டினர் என்றும், அவர் தனியாக குதித்து கொண்டிருந்தார் என்பதை உறுதிபடுத்தியது.Skydive Jurien Bay co-owner Christine Sparrow கூறுகையில், அந்த நபர் wingsuit போட்டியில் போட்டியிட்டதாக கூறினார். மேலும் 10 வருடத்தில் இதைப் போன்ற விபத்து நடந்தது இல்லை. இது ஸ்கை டைவிங் சமூகத்திற்கு இந்த நாள் பயங்கரமான நாள். எங்கள் கவலையெல்லாம் அவருடைய குடும்பத்தை பற்றி தான் என்றார்.

இந்த விபத்து குறித்து Dandaragan Shire president Leslee Holmes கூறுகையில், இறந்த அந்த நபர் 6000 முறை குதித்த அனுபவம் உள்ளவர். அவர் தனது சொந்த உபகரணங்களை பயன்படுத்தினார். இதைப்பார்த்த மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். இந்த நகரத்தை பொறுத்தவரை ஸ்கை டைவிங் தான் எங்களுடைய பிரதான வணிகம். இது பல மக்களை இங்கு வர கவர்ந்துள்ளது என்றார்.

Skydiver diesஆஸ்திரேலிய Parachute Federation chief executive officer Richard McCooey கூறும்போது, அந்த நபரின் மரணத்தை பற்றி முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். எந்த அளவு அனுபவம் இருந்தாலும், பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இதற்கான காரணம் என்ன என்பதை APF விசாரணை மேற்கொள்ளும். இவருடைய மரணத்தை பற்றி விசாரிக்க கரோனியல் விசாரணை அமைக்கப்படும் என்றும் கூறினார்.