Breaking News

காதலனை காவலர்களிடம் தப்பவைக்க நாடகமாடிய காதலிக்கு 6 ஆண்டு சிறை..!!

காவல்துறையினரை திசைத் திருப்பி காதலனை தப்பவைக்க முயன்ற பெண் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது.

6 years in jail for girlfriend who played drama to escape her boyfriend from cops

கடந்தாண்டு ஜூலை 9-ம் தேதி, கான்பெர்ராவைச் சேர்ந்த கைதி கேன் கியுன் உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பார்க்க வந்த காதலி லிலா ரோஸ் மேரி வால்டோ (29), மருத்துவமனை வளாகத்தில் இருந்த காரை எடுத்துக் கொண்டு, அரசுக்கு சொந்தமான வாகனத்தின் மீது விபத்தை ஏற்படுத்தினார்.

6 years in jail for girlfriend who played drama to escape her boyfriend from cops.இதன்மூலம் அதிகாரிகளின் கவனத்தை திசைத் திருப்பி காதலனை தப்பவைக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி பலனிக்கவில்லை. அரசுக்கு சொந்தமான வாகனத்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக லிலா வால்டோவை காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மருத்துவமனை வளாகத்துக்கு வந்த காதலனை தப்பவைக்கை விபத்து ஏற்படுத்துவது போல் நாடகமாடியது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு ஆஸ்திரேலியன் கேப்ட்டல் டிரெட்டரி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் மோசாப், லிலா வால்டோ மீதான குற்றத்தை உறுதி செய்தார். தற்போது இவ்வழக்கில் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கான்பெர்ரா மருத்துவமனையில் காதலனை தப்பவைக்க, அரசு வாகனத்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக லிலா வால்டோவுக்கு ஆறரை ஆண்டுகள் கடுங்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் மே 2024-ம் ஆடு வரை அவரால் பிணையில் வெளியே வரமுடியாது. இரண்டாண்டுகள் தண்டனையை அனுபவித்த பிறகே லிலா வால்டோவுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.