Breaking News

விக்டோரியாவில் புதிதாக 5 பேருக்கு தொற்று பாதிப்பு : முதியோர்களை கவனித்து வந்த மெல்போர்ன் பெண் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு

5 new infections in Victoria Melbourne woman caring for the elderly get infected with the virus

உள்ளூர் நபர்கள் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு பெண் Arcare Maidstone முதியோர்களை கவனித்து வந்தவர் ஆவார். அவருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இரண்டு தடுப்பூசிகளும் எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபைசர், அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் இரண்டும் உரிய முறையில் நோய்த்தடுப்பு மருந்துகளாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு ஏற்படும் உடல் பாதிப்புகளை சரி செய்தும் தொற்று பாதிப்பு ஏற்படுவது ஆச்சர்யத்தை அளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

5 new infections in Victoria. Melbourne woman caring for the elderly get infected with the virusதொற்று பாதித்த 5 பேரின் நெருங்கிய தொடர்பில் இருந்த 2 பேர் கண்டெடுக்கப்பட்டு அவர்கள் வீட்டு தனிமையில் இருக்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதியோர்களை கவனித்து வந்த பெண்ணும் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தெற்கு மெல்போர்னில் மூன்றாவது தொடர்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், ஏற்கனவே தொற்று பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்ட 170 இடங்களில் தொடர்புடைய நபர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் முதியோர்களை கவனித்து வந்த பெண்ணுக்கு தொற்று பாதித்தற்கான தொடர்பை கண்டறிய முடியவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த குறிப்பிட்ட பெண்ணின் பாதிப்பை, மர்மமான தொற்று தொடர்பு என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளளர். மேலும் குறிப்பிட்ட அர்கேர் முதியோர் இல்லத்தில் அனைத்து முதியவர்களுக்கும் பணி நாட்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு முடிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

5 new infections in Victoria. Melbourne woman caring for the elderly get infected with the virusதொற்று பாதிப்பு அதிகமுள்ள இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் ஜூன் மூன்றாம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் இது மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையுடன் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தற்காலிக ப்ரீமியர் James Merlino கூறியுள்ளார். சுகாதாரத்துறையிடமிருந்து முறையான அறிவுரைகள் ஆலோசனைகள் பெறப்பட்டு அதனடிப்படையில் ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொற்று பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை நிச்சயம் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3i1pRaB