Breaking News

கோவிட் 19 பெருந்தொற்றை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து புதிய பாதையை வகுத்துள்ளன : நியூசிலாந்து சென்ற ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேச்சு

Australia and New Zealand work together to tackle Covid 19 epidemic Australian PM Scott Morrison

அரசுமுறைப் பயணமாக நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு அந்நாட்டு பாரம்பரிய குயின்ஸ்டவுனில் முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் திறக்கப்பட்ட பின்பு முதன் முறையாக வெளிநாட்டுத் தலைவர் ஒருவரின் வருகை அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உடன் இருநாடுகளுக்கு இடையிலானஅரசு முறை திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் உரையாற்றிய ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் பெருந்தொற்று காலத்தை ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சரியான முறையில் கையாண்டு தாகவும் உலக அளவில் பொருளாதார பாதிப்பு எதிர் கொண்ட நாடுகளில் இரண்டு நாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பெருந்தொற்று காரணமாக எல்லைகள் மூடப்பட்டிருந்தது குறித்தும் தற்போது அது திறக்கப்பட்டு தான் நியூசிலாந்து வந்திருப்பதும் பிரதமரிடம் அரசு முறை பேச்சுவார்த்தைக்காக மட்டுமல்ல, இரு நாட்டைச் சேர்ந்த மக்களும் அவர்களது நண்பர்களை உறவினர்களை சந்திப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மோரிசன் கூறியுள்ளார்.

Australia and New Zealand work together to tackle Covid 19 epidemic Australian PM Scott Morrison,உலகலாவிய நாடுகளுடன் கடந்த 18 மாதங்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் சரியான நடவடிக்கை எடுத்ததாகவும், சில விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை மீறி உரிய முறையில் பெருந்தொற்றை எதிர் கொண்டதாகவும் மோரிசன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இணைந்து Anzac – என்ற புதிய பாதையை வகுப்பதாகவும் இதன் மூலம் அனைத்து சவால்களையும் எதிர் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பேசுகையில், இரு நாட்டு எல்லைகளும் திறக்கப்பட்டு அதன் காரணமாக கிவி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்க படுவதாகவும் இதன் மூலம் பொருளாதார பாதிப்பை சரி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் சீனா, பசிபிக் நாடுகளை எதிர்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தையின் மூலமாக இரு நாடுகளிடையே இணக்கமான சூழல் மேலும் அதிகரிக்கும் என்றும் இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/3vCzZKQ