Breaking News

ஆஸ்திரேலியாவின் ACT -ல் புதிதாக 19 பெயருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி : பெரும்பாலும் Canberra முதியோர் பராமரிப்பு மையங்களில் இருந்தவர்களுக்கு தொற்றுப் பரவல்

19 new cases confirmed by virus in Australia ACT. Outbreaks appear to be concentrated in Canberra nursing homes

19 பேரில் 13 பேர் ஏற்கனவே வைரஸ் பாதிப்பு உடையவர்கள் இடம் தொடர்பில் இருந்ததாகவும் பெரும்பாலும் அவர்கள் வடக்கு Canberra முதியோர் பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 2 பேருக்கு வென்டிலேஷன் உதவி தேவைப்பட்டுள்ளது.

19 new cases confirmed by virus in Australia ACT. Outbreaks appear to be concentrated in Canberra nursing homes.தற்போது வரை ACTல் 217 பேர் வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 83.5 % தகுதி பெற்றவர்கள் முதல் டோஸ் தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ACT முதலமைச்சர் Andrew Barrகூறியுள்ளார். 57.5 % பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

தற்போது ACT ல் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கு மாடர்னா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்றும், விரைவில் முழுவதுமாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாநிலமாக இருக்கும் என்றும் ACT முதலமைச்சர் Andrew Barr குறிப்பிட்டுள்ளார்.

Canberra -வில் உள்ள Calvary Haydon Retirement Community -ல் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அங்கு 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட செவிலியர் ஒருவருக்கு தொற்று பாதித்த நிலையில் அவர் மூலமாகவே அப்பகுதி தொற்று பரவல் மையமாக மாறியதாக கூறப்படுகிறது.

19 new cases confirmed by virus in Australia ACT. Outbreaks appear to be concentrated in Canberra nursing homes,.முதியோர் பராமரிப்பு மையத்திலுள்ள முதியவர்கள் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் Rachel Stephen-Smith கூறியுள்ளார். மேலும் Canberra மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் தினசரி கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் Rachel Stephen-Smith தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3CC3Mq6