Breaking News

மெல்போர்னில் முடக்க நிலைக்கு எதிரான போராட்டம் : போராட்டக்காரர்களை கலைக்கும் வகையில் 200 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை

Struggle against the position to disable Melbourne. Police action arrested 200 people to dissolve the protesters

மெல்போர்னில் வடக்கு உள் இப்பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் 31 போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நகர் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை தொடர்ந்து விக்டோரியா போலீசார் கைது செய்து வருகின்றனர்.

Northcote Plaza அடுத்து உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்களை போலீசார் அதிரடியாக கலைத்தனர். மேலும் நகர் முழுவதும் போராட்டத்துக்காக ஒன்று கூடுபவர்களை கலைப்பதற்காக போலீசார் தயார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Struggle against the position to disable Melbourne. Police action arrested 200 people to dissolve the protesters.மெல்போர்னில் அரசின் உத்தரவுகளை மீறியதாகவும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக போராட்டக்காரர்கள் சிறுசிறு குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருவதாகவும், தற்போது நகர்ப் பகுதிகளில் இருந்து அவர்கள் ஊரகப் பகுதிகளில் தங்கள் போராட்டத்தை தொடர திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மெல்போர்னின் CBD பகுதியில் போராட்டக்காரர்களின் கடும் அடாவடி காரணமாக இரண்டு தடுப்பூசி மையங்கள் அதிரடியாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதேபோன்று குயின் விக்டோரியா மார்க்கெட் பகுதியில் உள்ள தடுப்பு மையங்கள் போராட்டம் காரணமாக கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளது.

Struggle against the position to disable Melbourne. Police action arrested 200 people to dissolve the protesters..கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பு, முடக்க நிலை நீட்டிப்பு மற்றும் எல்லைகளில் தளர்வுகள் கொடுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து CFMEU கூட்டமைப்பைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கடந்த ஒருவாரமாக பெரும்பாலான நகர்ப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் CFMEU கூட்டமைப்பு தொழிலாளர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

Struggle against the position to disable Melbourne. Police action arrested 200 people to dissolve the protesters,.இதனிடையே முக்கிய நகரப் பகுதிகள் மற்றும் உள்ளூர் அரசு ஊரக பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடத்துவதற்கு வெட்டோரி அரசு தடை விதித்துள்ள நிலையில் கட்டுமான தொழிலாளர்கள் தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக குவிந்து வருகின்றனர். கட்டுப்பாடுகளை தளர்த்தி தங்களை மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருசிலர் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் அவர்கள் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே போராட்டத்தை தவிர்க்குமாறும் மக்கள் ஒன்று கூடும் பட்சத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமாக உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3ESKgrp