Breaking News

கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விக்டோரியாவிற்குள் நுழைய தடை விதிக்க நேரிடும் என்று விக்டோரிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விக்டோரியாவில் கடந்த 6 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.  மாகாண அரசின் ஊரடங்கு மற்றும் தொடர்பறிதல் நடவடிக்கையின் பலனாக கடந்த மே மாதம் விக்டோரியாவில் ஏற்பட்ட பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அண்டை மாகாணங்களான குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

அண்டை மாகாணங்களில் தொற்று பாதித்த பகுதிகளை ஆரெஞ்சு மற்றும் சிவப்பு என்று இரு வகைகளாக பிரித்து விக்டோரிய சுகாதாரத்துறை அடையாளப்படுத்தியுள்ளது.

இந்த பகுதிகளில் இருந்து  விக்டோரியா மாகாணத்திற்குள் வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை  ஏற்கனவே அறிவித்திருந்தது.

The Victorian Health Department has warned that entry into Victoria from restricted areas could be banned if corona controls are not followed properly.அண்மையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விக்டோரியா மாகாணத்திற்கு வந்தவர்கள் சிலர் இந்த தடையை மீறி பொது வெளியில் சுற்றுவதாகவும் இதுபோன்று நிகழ்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி டேனியல் ஓ பிரைன் தெரிவித்துள்ளார். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வருவதை கட்டுப்படுத்த நேரிடும் என்றும் சுகாதாரத்துறை முதன்மை அதிகாரி டெரிக் ஓ பிரைன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதாரத் துறையால் ரெட் ஜோன் என்று அழைக்கப்படக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரக்கூடிய விக்டோரிய வாசிகள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்று வந்தவர்கள் சுமார் 321 பேர் தற்போது விக்டோரியாவின் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் வீடுகளுக்கே சென்று சுமார் 288 பேரிடம் சோதனை மேற் கொண்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் இதில் மூன்று பேர் சுகாதாரத்துறை வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாமல் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The Victorian Health Department has warned that entry into Victoria from restricted areas could be banned if corona controls are not followed properlyமாகாண மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில்  அரசுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், ஆனால் அரசால் கொடுக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுபோன்று விதிகளை பின்பற்றாத  ஒருசிலரால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .

குயின்ஸ்லாந்து சிட்னி, கோல்ட் கோஸ்ட் கிரேட்டர் டார்வின், பெர்த் போன்ற பகுதிகள் ஆரஞ்சு வண்ண பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனது.

ஆரஞ்சு வண்ணப் பகுதியிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் விக்டோரிய மாகாணத்திற்கு நுழையும் போது தங்களை ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் நெகட்டிவ் சான்றிதழ் கிடைக்கும் வரை அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .

இதுவரைக்கும் சுமார் 3 ஆயிரத்து 300 பேர் இந்த ஆரஞ்சு பகுதியில் இருந்து வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை மீறும் போது, அயர்ச்சி ஏற்படுத்துவதாகவும் ஓ பிரைன் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை மட்டும் சுமார் 22149 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 15 ஆயிரத்து 457 பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உருமாறிய கப்பா மற்றும் டெல்டா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விக்டோரியாவில் தற்போது வர்த்தக நிறுவனங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று வர்த்தக சங்கங்கள் மாகாண அரசுக்கு வலியுறுத்தியுள்ளன.

Link Source: shorturl.at/cqNU5