Breaking News

15 வருடங்கள் கடந்த கூகுள் மேப்ஸ் !

இந்த சாதனை குறித்து Elizabeth Reid ,google maps-இன் Vice President of Engineering கூறுகையில் ,

பதினைந்து வருடத்திற்கு முன்னர் நாங்கள் இந்த Google Maps ஐ மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைத்தோம். இதனுடைய வளர்ச்சியை திரும்பி பார்க்கும்போது நம்ப முடியாத அனுபவத்தை அளித்துள்ளது. இந்த Google Maps ல் பல அம்சங்கள் மற்றும் திறன்களை நாங்கள் கூட்டியுள்ளதால், Google Maps வலைதளத்தை விட அதிகமாக பயன்பாடு அதிகரித்துள்ளது. இன்று உலகத்தை நிஜ வாழ்க்கை அல்லது digital முறையில் ஆராய்ந்து பார்க்க ஒரு நுழைவு வாயிலாக உள்ளது. கூகுளின் பிறந்த நாளை பல முக்கியமான, மகிழ்ச்சியான தருணங்களை நாம் திரும்பி பார்க்கிறோம்.

Google Maps பிறப்பு :

2005ஆம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி மக்களுக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் வகையில் Google Maps முதன் முதலாக நிறுவப்பட்டது. இன்று ஒவ்வொரு மாதமும் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயன்படுத்துகிறார்கள்.

Google Earth அறிமுகம் :

சில மாதங்களுக்கு முன்னர் தான் Google Earth ஆரம்பமானது. இது கிரகங்களின் 3D உருவத்தை நம் வீட்டிற்கே கொண்டு வருகிறது. தற்போது 36 million square miles க்கு உள்ள கிரகங்களின் துல்லியமான படங்களை காண்பிக்கின்றது.

வளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட தருணம் :

2005 நடுப்பகுதி வரை எந்த வளையத்திலும் Google இல்லை. அதன் பிறகு Google Maps API அறிவிக்கப்பட்டது. இன்று ஒவ்வொரு வாரமும் 5 மில்லியனுக்கும் அதிகமான வலைதளங்கள் Google Maps தளத்தை உபயோகப்படுத்துகின்றனர்.

கூகிள் ட்ரிப் பிளானர் போர்ட்லேண்டிற்கு சென்ற தருணம் :

முதன்முதலில், 2005ம் ஆண்டு டிசம்பரில் Portlandல் உள்ள 2005, Oregon city தான் Transit Trip Planner ஐ பயன்படுத்தி மக்களுக்கு பொது போக்குவரத்து வழிகளை தந்தது. இது பின்னர் Google Maps உடன் இணைக்கப்பட்டு இன்று உலகின் பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

நிகழ்நேர போக்குவரத்து செய்திகள்:

Google Maps தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு U.S. ன் 30க்கும் மேற்பட்ட நகரங்களின் போக்குவரத்து நிலைமையை உடனுக்குடன் நேரலையாக தகவல்களை தந்தது. இதனால் போக்குவரத்து பற்றிய தகவல்களை எளிதாக பெற முடிந்தது.2007 மே 29ல் Google Maps ன் வழியாக Street View .அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் பிரியமாக பார்க்கும் பகுதியாக மாறியது. அதில் எல்லாத வீதிகளையும் படம்பிடிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டன. மொத்தம் 10 மில்லியன் மைலுக்கு மேல் இதில் கவரப்பட்டது.

கைபேசியிலும் நுழைந்த google map :

smartphones நம்மை எந்த இடத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் நம்மை வழிநடத்தும். பல முயற்சிக்கு பிறகு 2007& நவம்பரில் நாங்கள் Google Maps ன் version 2.0 ஐ Blackberry, Palm devices க்கு அறிமுகப்படுத்தினோம். பின் 2008 எங்களுடைய முதல் Android app அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 2012ல் iOS app வந்தது.

2009ல் ஒவ்வொரு திருப்பத்திற்கும் வழியை கோரும் விதமாக update செய்யப்பட்டது. இதனால் எந்த இடத்தையும் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. Street View ஐ ஏற்கனவே அறிமுகப்படுத்தினோம். ஆனால் 2012ல் Street View Trekke ஐ அறிமுகப்படுத்தினோம். இதனால் எளிதில் செல்ல முடியாத உயரமான இடங்கள் அமேசான் காடு மற்றும் Eiffel Tower ன் மேல் ஆகியவற்றை எளிதாக படம் பிடிக்க உதவியது.

Google Maps உலகத்தை மட்டும் பற்றி தெரிந்து கொள்வது மட்டுமல்ல. 2014ல் உணவகங்கள், bars, hotels அவற்றின் வேலை நேரம், அதில் என்ன விலைகள் என்ற பல தகவல்களை பெற முடியும். இதில் உள்ள your என்பதிலிருந்து உலகம் முழுவதிலும் 200 மில்லியன் வணிகத்தளங்களை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

வியாபாரத்தையும் பார்த்துக்கொள்கிறது :

நாங்கள் எப்போதுமே வணிகத்திற்கு முன்னுரிமை தருவோம். 2014 ஜூனில் Google My Business இதற்கு உதவியது. இதில் வணிகர்கள் தங்களுடைய வணிகத்தை update செய்துகொள்ளலாம்.

இணைப்பு இல்லையா ? எந்த பிரச்சினையும் இல்லை!

2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் offline maps யும் அறிமுகப்படுத்தினோம். இதனால் இன்டர்நெட் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் அந்த இடத்தை பற்றிய உபயோகரமான தகவல்களை பெற முடியும்.அதே மாதத்தில் நாங்கள் Local Guides program ஐ தொடங்கினோம். இதன் மூலம் உலகத்தின் பல்வேறு இடத்தை பற்றிய புகைப்படம் மற்றும் அது குறித்து தகவல்களை பெற முடியும்.

2018ம் ஆண்டு மார்ச்சில் நாங்கள் wheelchair-accessible routes ஐ தொடங்கினோம்.

இன்று 50 மில்லியன் இடங்களுக்கு மேல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களில் இந்த wheelchair வசதி பயன்படுத்தப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாதத்தில் Live View அறிவித்தோம். உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் Google Map புதிய கருவிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.