Breaking News

ஆஸ்திரேலியரின் David Warren அசத்தல் கண்டுபுடிப்பு

David Warren-1925 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தான் உலகின் முதல் விமான ரெக்கார்டரை கண்டுபிடித்தவர். 1956ஆம் ஆண்டு ஒரு விமான விபத்து குறித்து விசாரிக்கும் போது தான் அந்த விபத்து நடந்திருக்கும் முன்பு cockpit -டில் கடைசி நிமிடங்களை பதிவு செய்து, தவறு எங்கு நடந்திருக்கலாம் என்பதை கண்டுபிடிக்க ஒன்று தேவை என்கின்ற யோசனை அவருக்கு வந்தது.

1954 ஆம் ஆண்டுக்கு பிறகு, இவர் cockpit -டில் குரலையும், ஒலியையும் பதிவு செய்யும் திறன் கொண்ட அடிப்படை விமான தரவை உருவாக்கினார். ஆஸ்திரேலிய விமான அதிகாரிகள் ஆரம்பத்தில் இவர் உருவாக்கிய அந்த இயந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அதனோடு வளர்ச்சியையும் ஆதரிக்கவில்லை, ஆனால் அதன்பின் ஒரு ஆங்கில நிறுவனம் Davall & sons இவருக்கு வணிக விமான ரெக்கார்டுகளை தயாரிக்க வழிகளை கூறியது. தற்போது ஒவ்வொரு வணிக விமானமும் ஒரு விமான ரெக்கார்டரை கொண்டுள்ளது.

David Warren-க்கு எலக்ட்ரானிக்ஸ் மீதான ஆர்வம் மிகவும் அதிகம், அந்த ஆர்வம் அவர் தனது தந்தையிடம் இருந்து பெற்ற கடைசி பரிசான ஒரு படிக வானொலியால் வந்தது. 1934 ஆம் ஆண்டு warren குழந்தையாக இருந்தபோது Reverend Hubert Warren, Miss Hobart Plane-ல் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதில் இருந்த அனைவருமே அந்த விபத்தில் இறந்துவிட்டனர்.

விமானப் போக்குவரத்தில் ஆஸ்திரேலியா விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றுப் பாதையில் இருந்த நேரத்தில் warren விமானதின் பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணிக்க ஈடுபட்டார். 1953ஆம் ஆண்டு மெல்போர்னில் Aeronautical Research Laboratory-ல் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானியாக நியமிக்கப்பட்ட இவர், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிருந்த Havilland Comet Jetliner வெடித்ததைப் பற்றி விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டார்.

அந்த விபத்துக்கு காரணம் எரிபொருள் டேங்க் வெடித்ததாக கூறப்பட்டது. பிறகு தான் இது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டது. மேலும் விமான டெக்கில் உரையாடல் பதிவு இருந்திருந்தால் விபத்து நடந்ததற்கான காரணம் உண்மையாகவே தெரிந்திருக்கும் என்பது இவரை முழுமையாக சிந்திக்கத் தூண்டியது.

விமான ரெக்கார்டரை பதிவு செய்ய Davall & Sons லிமிடெட் பயன்படுத்திய விமான ரெக்கார்டர்கள் வரும் காலங்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருந்தது.David Warren-ன் இன்றைய விமான பதிவுகள் இன்னும் வட்டமான வடிவம் மற்றும் பிரகாசமான நிறத்தைக் கொண்டுள்ளன. பழைய மாடலை போல இல்லாமல் அவை பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அது பிளாக் பாக்ஸ் என்ற பெயரிலேயே தான் இருக்கும். அவற்றை விமானத்தின் வால் பகுதியில் வைத்திருந்தாலும் அதை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும் எனவே அது விபத்திலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது.

இவரின் யோசனைகளுக்கு ஆரம்பத்தில் அதிக எதிர்ப்பு இருந்தாலும், விமானப்பதிவுகளை கட்டாயமாக்கிய முதல் நாடு ஆஸ்திரேலியா. மேலும் இன்று பல விலைமதிப்பற்ற தகவல்களை வழங்கி வருகின்றது.ஆரம்பகாலப் பணிகள் மற்றும் பிளாக் பாக்ஸ் ரெக்கார்டரின் வளர்ச்சியின் மூலம் 2002ஆம் ஆண்டு இவர் விமான துறையில் தனது பணிக்காக Order of Australia-வின் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது பவர்ஹவுஸ் அருங்காட்சியகம் Warren மற்றும் Davall தயாரித்த பிளாக் பாக்ஸ் முன்மாதிரிகளை எடுத்துக்கொண்டுள்ளது. மேலும் அது எவ்வாறு செயல்படும் என்பதையும் காட்டி வருகின்றது. விமான ரெக்கார்டரை கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானியான David Warren 2010ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார்.

Link Source: blog.google