Breaking News

விக்டோரியாவில் புதிய கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக விக்டோரியா மாகாண பிரிமீயர் டேனியல் ஆன்ட்ரூஸ் அறிவித்துள்ளார்.

Victoria Premier Daniel Andrews has announced that the curfew will be extended until September 2 with new restrictions in Victoria.

விக்டோரியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பலர் தெருக்களில் கூடி மது விருந்து நிகழ்ச்சி நடத்துவதாலும், கட்டுப்பாடுகளை மீறுவதாலும் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பிரிமீயர் டேனியல் தெரிவித்துள்ளார்.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டு மைதானங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சி செல்வோர் கூட்டமாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முககவசம் இல்லாமல் மது அருந்த தடை விதிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று காவல் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/mKTVY