Breaking News

பிலிப்பைன்ஸில் கடும் புயல் தாக்குதலில் சிக்கி 12 பேர் பலி : 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புயலால் வீடுகளை இழந்து தவிக்கும் அவலம்

பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடும் புயல் சூறாவளி காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பெரும்பாலான பகுதிகள் கடுமையான சேத பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

புயல் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் மின் கம்பங்களும் அடியோடு முறிந்துள்ளன. மேலும் பெரும்பாலான கிராமங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிராமங்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

12 killed in Philippine typhoon. More than 3 lakh people displaced by typhoonRai என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது கடுமையாக தாக்கியதில் வெள்ள சேதத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், 18,000 பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. Siargao தீவில் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. ஏராளமான மரங்கள் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள Siargao தீவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு பேரிடர் மீட்பு குழுவினர் கடுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை புயல் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பிரபல சுற்றுலா பகுதி Palawan முழுவதுமாக சூறையாடப்பட்டு இருப்பதாகவும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் இயக்குனர் Ricardo Jalad கூறியுள்ளார்.

12 killed in Philippine typhoon. More than 3 lakh people displaced by typhoon,.வெடிகுண்டு தாக்குதலில் சிதிலமடைந்ததைப் போன்று பெரும்பாலான கட்டிடங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் அடியோடு பிடுங்கப்பட்டு உள்ள மின் கம்பங்கள் காரணமாக மின் இணைப்பும் தடைபட்டுள்ளது.

பாதிப்பு தொடர்பான முழுமையான விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என்றும் இதுவரை 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் கடுமையான பாதிப்புகளை சந்தித்து இருப்பதாகவும் Surigao மாநகர மேயர் Ernesto Matugas தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3GT3GMP