சிட்னியில் நடைபெற்ற டெய்லர் ஷிஃப்ட்டின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பலரும் கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 10-ம் தேதி சிட்னி மெட்ரோ தியேட்டரில் பிரபல பாப் பாடகி டிரெய்லர் ஷிஃப்டின் ”ஆன் ரிப்பீட்: டெய்லர் ஷிஃப்ட் ரெட் பார்ட்டி’ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாகவே, நியுகாஸ்ட்ள் சுகாதாரத்துறை வைரஸ் பரவல் குறித்து நிகழ்ச்சிக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும், கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 600 பார்வையாளர்கள் வரை கலந்துகொண்டிருப்பதாக தெரிகிறது. அவர்களில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதில் பலருக்கும் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள மாநில சுகாதாரத்துறை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நெகட்டிவ் சான்றிதழ் கிடைக்கும் வரை அவர்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3e4vphi