Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து விக்டோரியா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் இறுகுகிறது : புதிய தொற்றுப் பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை

Travel restrictions from Western Australia to Victoria tightened further. Action taken as new outbreak escalates

விக்டோரியாவில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டுமானால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை கொண்டுவரவேண்டும் என்றும், மேலும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. வந்த உடன் ஒரு பரிசோதனையும் 11வது நாளில் மற்றொரு பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் மிகக்குறைந்த பாதிப்பு மற்றும் குறைந்த பாதிப்புகள் கண்டறியப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே மேற்கு ஆஸ்திரேலியா வருவதற்கு மேற்கண்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எந்தவித சலுகைகளைப் பயன்படுத்தினாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் கொரொனா பரிசோதனை என்பது கட்டாயம் என்றும் விக்டோரிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Travel ban from New Zealand to New South Wales. Sudden action due to increase in corona infection.விக்டோரியாவில் தொற்று பரவல் மையங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்து இருந்தால் அவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் மேற்கு ஆஸ்திரேலிய தலைமை சுகாதார அதிகாரி Andrew Robertson கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியா தொடக்கத்திலிருந்தே எல்லைகள் விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தற்போதைய பெருந்தொற்று காலத்தில் அதற்கான செயல்பாடுகள் மேலும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Travel restrictions from Western Australia to Victoria tightened further. Action taken as new outbreak escalates,.அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் பெற்று பரவல் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் எல்லை தாண்டிய பயணங்களை கட்டாயம் தவிர்க்குமாறும் மேற்கு ஆஸ்திரேலிய தலைமை சுகாதார அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். AFL ஏப்ரல் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்றும் தலைமை சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3kkeons