Breaking News

தேசிய கீதத்தை மீண்டும் நிலைநிறுத்திய நிலையில் இருந்து NRL பின்வாங்கவில்லை

Prime Minister Scott Morrison-னின் தலையீட்டின் பின்னர் Adelaide-இன் புதன் கிழமைக்கான State of Origin தொடக்க வீரருக்கான தேசிய கீதத்தை scrap செய்து மீண்டும் நிலை நிறுத்திய நிலையில் இருந்து NRL பின் வாங்கவில்லை.

தேசிய கீதத்தை நீக்குவதற்கான அறிவிப்பு வந்த இரண்டு மணி நேரத்தில் கடும் எதிர்விமர்சனம் ஏற்பட்டதால் அந்த முடிவு மாற்றப்பட்டு தேசிய கீதம் மீண்டும் இணைக்கப்பட்டது.

எந்த ஒரு வீரரும் தேசிய கீதம் பாட நிர்பந்திக்கப்படமாட்டார் என்றும் அது அவரவர் தனிப்பட்ட முடிவை சார்ந்தது என்றும் திரு அப்டோ தெரிவித்தார்.

பொதுமக்கள் தொடர்ந்து கோவிட் தொற்று நோயை எதிர்த்து போராடுவதில் வலுவான தேசிய ஒற்றுமையை நிலை நாட்டினர். ஆகையால் தேசிய கீதம் தொடர்ந்து இசைக்கப்படும் என்று ARLC Chairman Peter V’landys தெரிவித்தார்.ஒரு வருட போராட்டத்திற்கும், மன உளைச்சலுக்கும் இந்த backflip மிகவும் அவசியமானதே என்று திரு மோரிசன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவை கொண்டாடுவதையும் நாம் விரும்பும் விளையாட்டில் நாம் ஒன்றிணைந்து நம் தேசிய கீதத்தை பாடுவதையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று அவர் கூறினார்.

மேலும் ,தேசிய கீதத்தை அகற்றுவதற்கான முடிவு அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டது அல்ல. Origin series உடன் கொண்டுள்ள போட்டியும் அதன் பழங்குடியினர் தொடர்புமே காரணம் என அவர் கூறினார்.இது சர்வதேச விளையாட்டு அல்ல என்ற காரணத்தால் தேசிய கீதம் நீக்கப்பட்டது.

கடந்த ஆண்டின் State Of Origin பொழுது பழங்குடி வீரர்கள் Maori அணியுடன் விளையாடும் பொழுது தேசிய கீதத்தை பாட மறுத்ததை தொடர்ந்து அப்பொழுதும் கீதம் Scrap செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.