Breaking News

விக்டோரியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

விக்டோரியாவில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் 42-நாள் COVID இல்லாத streak முடிவுக்கு வந்துள்ளது, ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஐந்து புது தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களில் 735 சர்வதேச மக்கள் வருகைகள் இருந்ததாகவும் , இதில் மெல்போர்னின் South Wharf-இல் உள்ள Novotel “ஹாட் ஹோட்டலில்” 55 அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

சனிக்கிழமையன்று உறுதியான ஐந்து வழக்குகளும் – 30 மற்றும் 50 வயதிற்குட்பட்ட இரண்டு ஆண்களும், 20, 30 மற்றும் 50 வயதிற்குட்பட்ட மூன்று பெண்களும் அடங்குவர்.இது 8,737 சோதனைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ,Deputy Chief Health Officer Professor Ben Cowie செய்தியாளர்களிடம் கூறுகையில்,கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ,அறிகுறி இல்லாதவர்கள் என்று முன்னெச்சரிக்கையுடன் பிரிக்கபட்டுள்ளனர்.மேலும் ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களின் 2,000 பேருக்கு சோதனைகள் ஏற்கனவே நடந்துள்ளதாக அவர் கூறினார்.

state’s Regional Travel Voucher திட்டத்தின் முதல் சுற்றின் ஒரு பகுதியாக வழங்கப்படும் 40,000 வவுச்சர்கள் கொடுத்து முடிந்துவிட்டன என்று பிசினஸ் விக்டோரியா கூறியுள்ளது.

மேலும்,ஜனவரி 22,2021 சனிக்கிழமை வரை Regional Victoria-வில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரவுகளை செலவிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.இதற்காக , வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை 800,000 விண்ணப்பங்கள் இணையத்தளம் மூலம் பெற்றதாக business விக்டோரியா கூறியுள்ளது.

முதல் சுற்று வவுச்சர்கள் முடிந்தாலும் , இரண்டாம் கட்டமாக ஜனவரி 27 முதல் ஏப்ரல் 1 வரை பயணங்களுக்கு திறக்கப்படும் என்றும் ,மூன்றாவது சுற்று ஏப்ரல் 6 முதல் மே 31 வரை கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் NZ குடியிருப்பாளர்களுக்காக எல்லையைத் திறந்து வைத்தார் Queensland Premier Annastacia Palaszczuk .இவ்வளவு நாட்களாக தங்களது குடும்பங்களை பிரிந்து இருந்தவர்களுக்கு இந்து ஒரு முக்கியமான நாளாக அமையும் என்று எனக்கு தெரியும் என்று அவர் கூறினார்.

எல்லைகள் திறக்கப்பட்டது என்றாலும், அவர்கள் வீடு திரும்பும்போது தனிமைப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது .
குயின்ஸ்லாந்தும்,சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் Adelaide-இல் இருந்து வரும் பயணிகளுக்காக திறக்கப்பட்டது, அதாவது அனைத்து ஆஸ்திரேலியர்களும் மார்ச் மாதத்திலிருந்து குயின்ஸ்லாந்துக்குள் வரலாம் .ஆனால் அவர்களும் கண்டிப்பாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தனிமைப்படுத்தப்படும் நிலைமையும் மாறும் என்று தான் நம்புவதாக Ms Palaszczuk கூறினார்.கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம், திங்கள்கிழமை அதிகாலை 1 மணி முதல் சமூகஇடைவெளியுடன் indoor நடன நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.