Breaking News

நிலக்கரியைப் பயன்படுத்தும் நாடுகளுக்காக பலிகடாவாக பசுபிக் தீவுநாடுகள் இருக்க அனுமதிக்க மாட்டோம் என Fiji PM அறிவிப்பு !

பருவ காலநிலை மாற்றத்தின்மீது, மிகப்பெரிய அளவில் நடவடிக்கை தேவை என, அதிக அளவில் கார்பன் வெளியீட்டை உண்டாக்கும் நாடுகளிடம் Fiji PM Frank Bainimarama முறையிட்டார். Pacific Islands கூட்டத்தில், இனியும் பருவகால மாற்றத்தில் சோம்பேறியாக இருப்பது இந்த உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Pacific தீவு நாடுகளை நிலக்கரி சுரங்கத்தின் Canary பறவையோடு சிலர் ஒப்பிடுகின்றனர். நிலக்கரி சுரங்கத்தில் ஆபத்தான வாயுக்களின் அளவை அறிய இந்த Canary பறவை உள்ளே அனுப்பப்படும். அது இறந்தால் உள்ளே யாரும் நுழையக்கூடாது என்று அவர்களுக்கு தெரிய வரும். இதைப்போல நிலக்கரியை பயன்படுத்தும் நாடுகளும் , அதிக அளவில் கார்பன் வெளியீடு செய்யும் நிறுவனங்களும் பசிபிக் தீவு நாடுகளை அந்த Canary பறவைபோல் நடத்த, இனியும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்தில் நடவடிக்கைகளை அதிகப்படுத்த, பசிபிக் தீவுகளில் மிகப்பெரிய நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிடம், மற்ற பசிபிக் தீவு நாடுகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பணக்கார நாடுகளில் பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மிகக் குறைவு என்றாலும் வரும்காலத்தில் அந்த நாடுகளும் மிகப்பெரிய விளைவினை எதிர்கொள்ளும் என அவர் எச்சரித்துள்ளார். இந்த அவசர நிலை Fiji நாட்டிற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவில் கார்பனை வெளியீடு செய்யும் நாடுகள் வெறும் தகவல் தகவல்களை மட்டுமே பெறுகின்றன எனவும், அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து உள்ளனர் என்பதை அவர்கள் மறக்கின்றனர் எனவும், பருவ காலநிலை மாற்றத்தில் ஒருவர் அக்கறையின்றி செயல்பட்டால், அது அனைவரையும் பாதிக்கும் எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள், UK, ஜப்பான் மற்றும் கொரியா நாடுகள், 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை சீர்செய்ய உறுதிமொழி எடுத்ததை அவர் பாராட்டியுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி Joe Biden -ன் எண்ணமும் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் . ஏற்கனவே Mr.Morrison மற்றும் அவரது அரசின் பருவ காலநிலை மாற்றத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளை பற்றி அவர் விமர்சித்து இருந்தார்.

Scott Morrison தன்னுடைய உரையில், Paris ஒப்பந்த கார்பன் வெளியீடு இலக்கினை அடைவதற்கான புள்ளிவிவரங்களை இனி ஆஸ்திரேலியா ஒருபோதும் சார்ந்து இருக்காது என்று குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கினை அடைவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கார்பன் வெளியீடு 2030ஆம் ஆண்டுக்குள் 29 சதவீதமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிரதேசங்களும் , கார்பன் வெளியீடு அளவினை 2050ஆம் ஆண்டுக்குள்ளோ, இல்லை அதற்கு முன்பாகவோ சீர்செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். இது அவர்கள் மீதான அழுத்தமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

UK -ஆல் நடத்தப்பட்ட காலநிலை உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்க படாததால் கடந்த வாரம் பத்திரிகைகளில் Morrison கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் UK பிரதமர் Boris Johnson, Morrison-க்கு பேச அழைப்பு விடுத்திருந்தாலும், சில காரணங்களுக்காக அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை . இந்த சர்ச்சையினை பெரிதுபடுத்தாமல், ஆஸ்திரேலியாவின் தேசிய நலனுக்காக ஆஸ்திரேலியாவின் காலநிலை மாற்றம் கொள்கை உருவாக்கப்படும் என பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்திருந்தார். உலக அளவிலான உச்சி மாநாட்டில் பேச அனுமதி கிடைப்பது முக்கியம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.