Breaking News

விக்டோரியாவில் தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனா தொற்று ஏதும் இல்லை !

ஆறாவது நாளாக விக்டோரியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை, உயிர்பலியும் இல்லை.

Melbourne-னில் கொரோனா பாதிப்பு 1.4 தொற்றாக ஆக குறைந்தது.வியாழன் கிழமை அன்று 2 மர்ம தொற்று பதிவாகி உள்ளது.கொரோனா வைரஸால் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 819, தேசிய எண்ணிக்கை 907 ஆகவும் உள்ளது.

புதன்கிழமை இரவு 8 மணி வரை வைரஸ் பரிசோதனை செய்யப்பட்ட 18,466 பேரில் ஒரு புதிய உள்ளூர் தொற்றுகளையும் அரசு பதிவு செய்யவில்லை என்று NSW Health தெரிவித்துள்ளது.

“NSW premier ,முக்கியமான விஷயங்களில் நம்பிக்கை இல்லாவிட்டால் தனது எல்லையைத் திறக்க மாட்டார்” என்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

மாநிலத்தின் சுகாதாரம் மிகவும் முக்கியம் , ஆதனால் விக்டோரியா மக்கள் நிச்சயமாக சுகாதாரமாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே தொற்றில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இனி வருவது பண்டிகை காலம் என்பதால் ,மக்கள் ஒன்று கூடும் பொழுது பாதுகாப்பாக இருக்க வேண்டியது கட்டாயம் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா தொற்று பரவுவதால் ஜாக்கிரதையாக இருக்கும் படி கூறி உள்ளார்.

விக்டோரியா-NSW border ஜூலை 8 அன்று மூடப்பட்டது.1919 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய்க்குப் பின்னர் இது மாநிலங்களுக்கிடையேயான முதல் ஊரடங்கு ஆகும்.

விக்டோரியாவின் S.A உடனான மற்ற எல்லையும் பதினைந்து நாட்களுக்கு தளர்த்தப்பட உள்ளது, அதே நேரத்தில் குயின்ஸ்லாந்து அதன் காலக்கெடுவை மாத இறுதியில் மறுபரிசீலனை செய்ய உள்ளது.

NSW எல்லைகள் மீண்டும் திறக்கத்தயாராகி வரும் நிலையில் , திரு ஆண்ட்ரூஸ் வீட்டிலேயே பண்டிகைகளை கொண்டாடும் படி கூறினார்.Victoria மக்கள் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சிட்னிக்கு செல்ல வேண்டாம்” என்று Premierகூறியுள்ளார்