Breaking News

தொடர் தாக்குதல்களால் இந்திய வம்சாவளி குடியிருப்பில் அச்சம் !

Melbourne-னில் இந்திய வம்சாவளி குடியிருப்பு தெருக்களில் நடந்த வன்முறைகளுக்கு பிறகு இந்திய வம்சாவளி மக்கள் இளைஞர்களால் குறிவைக்கப்படுவதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Werribee அருகில் உள்ள Manor Lakes-ல் வசிப்பவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.செப்டம்பர் 30 ஆம் தேதி ஒரு உள்ளூர் இளைஞன் தாக்கப்பட்டு அவரது Apple Iphone திருடப்பட்டப்பின்னர் இந்திய சமூகம் மற்றும் இளைஞர் கும்பலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாக குடியிருப்பாளர்களும் காவல் துறையும் தெரிவித்தனர்.

அக்டோபர் 7 ஆம் தேதி பள்ளியில் இருந்து திரும்பிய இளைஞன் மூன்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டு அவனது backpack-ஐ களவாடி ஓடிச் சென்றனர்.

Greater Melbourne-னின் மக்கள் தொகையில் 4.4 சதவீதம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால் Wyndham-ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் சமூகத்தில் 12.2 சதவீதத்தினர்.

இந்த சமூக விரோத கும்பல் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களில் எங்கள் குழந்தைகள் வரும்பொழுது அவர்களை குறிவைக்கின்றனர். நாங்கள் அனைவரும் 30 முதல் 35 வயதுடைய இளம் குடும்பங்கள் எங்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்று அங்கு குடியிருக்கும் Chakri Chayanam தெரிவித்தார்.

காவல்துறை அவர்களை விரைவாக கைது செய்ததை அவர் பாராட்டினார். ஆனால் இந்த குற்றவாளிகள் மீண்டும் ஜாமினில் வருவதால் ஏற்படும் பாதிப்பை குறித்து நீதித்துறை அறிந்திருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

செப்டம்பர் மாதம் துணை கமிஷ்னர் Rick Nuget இளைஞர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் திணறி வருவதால் இந்த கும்பலின் குற்றங்களை தடுக்க மாநிலம் தழுவிய முறையில் எதிர்த்து போராடுவதற்கு Operation Alliance உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் கருத்துக்களை அமைதியாகவும் சட்டப்பூர்வமாகவும் வெளிப்படுத்தும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம் .ஆனால், சட்டத்தை மீறுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று காவல் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.